மே மாதத்தில் சென்னை மெட்ரோ ரயில்களில் 89.09 லட்சம் பேர் பயணம்!
கடந்த மே மாதத்தில் 89.09 லட்சம் பயணிகள் சென்னை மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துள்ளதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், சென்னையில் உள்ள மக்களுக்கும், மெட்ரோ ரயில் பயணிகளுக்கும் போக்குவரத்து வசதியை அளித்து வருவதோடு நம்பகத் தன்மையான பாதுகாப்பான வசதியை வழங்கி வருகிறது. அந்த வகையில் 2025 ஆம் ஆண்டு மே மாதத்தில் 89,09,724 பயணிகள் மெட்ரோ ரயில்களில் பயணித்துள்ளனர்.
நடப்பாண்டு ஜனவரி மாதத்தில் 86,99,344 பயணிகளும், பிப்ரவரி மாதத்தில் 86,65,803 பயணிகளும், மார்ச் மாதத்தில் 92,10,069 பயணிகளும், ஏப்ரல் மாதத்தில் 87,89,587 பயணிகளும் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துள்ளனர். அதிகபட்சமாக 05.05.2025 அன்று 3,23,899 பயணிகள் பயணம் செய்துள்ளனர்.
2025, மே மாதத்தில் மட்டும் பயண அட்டைகளைப் பயன்படுத்தி 5,86,430 பயணிகள், டோக்கன்களைப் பயன்படுத்தி 1,268 பயணிகள், குழு பயணச்சீட்டு )முறையை பயன்படுத்தி 169 பயணிகள், க்யுஆர் குறியீடு (QR Code) பயணச்சீட்டு முறையைப் பயன்படுத்தி 42,33,865 பயணிகள், சிங்கார சென்னை அட்டையைப் (தேசிய பொது இயக்க அட்டை) பயன்படுத்தி 40,87,992 பயணிகள் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துள்ளனர்.
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் மெட்ரோ ரயில்களில் பயணிப்பவர்களுக்கு க்யுஆர் குறியீடுபயணச்சீட்டு, பயண அட்டைகள் வாட்ஸ்ஆப்(+91 83000 86000), பேடிஎம் செயலி, போன்-பே, மற்றும் சிங்கார சென்னை அட்டை போன்ற அனைத்து வகையான பயணச்சீட்டுகளுக்கும் 20% கட்டணத் தள்ளுபடி வழங்குகிறது.
மெட்ரோ ரயில்கள் மற்றும் மெட்ரோ ரயில் நிலையங்களை பராமரிப்பதில் மிகுந்த ஒத்துழைப்பு நல்கிவரும் அனைத்து பயணிகளுக்கும் சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகத்தின் சார்பில் மனமார்ந்த நன்றி எனக் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிக்க | ஞானசேகரனுக்கு தூக்கு தண்டனை வழங்கியிருக்க வேண்டும்: தமிழிசை