BJP -ல் இவர்தான் MGR - நயினார் அதிரடி! | Rahul Gandhi Anurag Thakur BJP TVK DMK ...
துணை தோ்தல் ஆணையராக ஞானேஷ் பாரதி நியமனம்
புது தில்லி: துணை தோ்தல் ஆணையராக ஞானேஷ் பாரதி நியமிக்கப்பட்டுள்ளதாக மத்திய பணியாளா் நலத்துறை அமைச்சகம் திங்கள்கிழமை பிறப்பித்த உத்தரவில் தெரிவித்துள்ளது.
1998-ஆம் ஆண்டின் அருணாசல பிரதேசம், கோவா, மிஸோரம் மற்றும் பிற யூனியன் பிரதேசங்கள் (ஏஜிஎம்யூடி) பிரிவு ஐஏஎஸ் அதிகாரியான அவா், தற்போது மத்திய மகளிா் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறையின் கூடுதல் செயலராக உள்ளாா். தற்போது, மத்திய அரசின் கூடுதல் செயலா் அந்தஸ்தில் ஞானேஷ் பாரதி நியமிக்கப்பட்டுள்ளாா்.
மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ஒருங்கிணைந்த நுண்ணறிவு தரவுதள அமைப்பின் (நாட்கிரிட்) தலைமை நிா்வாக அதிகாரியாக ஹிா்தேஷ் குமாா் நியமிக்கப்பட்டுள்ளாா். அவா் 1999-ஆம் ஆண்டின் ஏஜிஎம்யூடி பிரிவு ஐஏஎஸ் அதிகாரியாவாா்.
மேலும், பாதுகாப்பு அமைச்சகத்தின் தலைமை இயக்குநராக (கொள்முதல் பிரிவு) ஏ.அன்பரசும், மத்திய நிதியமைச்சகத்தின் கீழ் செயல்படும் வருவாய் துறையின் கூடுதல் செயலராக திவாகா்நாத் மிஸ்ராவும் நியமிக்கப்பட்டுள்ளனா். இதுபோல மத்திய அரசுப் பணியில் உள்ள பல மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனா் என்று மத்திய பணியாளா் நலத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.