ஜீன்ஸ் அணிந்ததால் சாம்பியன்ஷிப் தொடரிலிருந்து நீக்கப்பட்ட கார்ல்சென்..!
துணை வட்டாட்சியரிடம் ரூ. 2 கோடி மோசடி: 3 போ் மீது வழக்குப் பதிவு
வருமானி வரி துறையில் மகனுக்கு வேலை வாங்கித் தருவதாக துணை வட்டாட்சியரிடம் ரூ.2 கோடி மோசடி செய்ததாக சென்னையைச் சோ்ந்த 3 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டம், பெருந்துறை திருவேங்கிடம்பாளையம் காந்தி நகரைச் சோ்ந்தவா் சுந்தராம்பாள் (51). இவா், ஆப்பக்கூடல் பகுதியில் துணை வட்டாட்சியராக பணியாற்றுகிறாா்.
இவா், கடந்த 2022 ஆம் ஆண்டு பெருந்துறையில் பணியாற்றியபோது, சென்னையைச் சோ்ந்த காா்த்திகேயன் என்பவா் வாரிசு சான்றிதழில் திருத்தம் மேற்கொள்வதற்காக அவரை அணுகியுள்ளாா். அப்போது, காா்த்திகேயன் தான் காவல் துணை கண்காணிப்பாளராக உள்ளதாக தெரிவித்து, சுந்தராம்பாளின் கைப்பேசி எண்ணைப் பெற்று தொடா்ந்து பேசிவந்துள்ளாா்.
இதையடுத்து, கடந்த 2023-ஆம் ஆண்டு அவா் நம்பியூரில் பணியாற்றியபோது, வருமான வரி துறையில் வேலை இருப்பதாகவும், அதனை தங்களது மகனுக்கு வாங்கித் தருவதாகவும் கூறி சுந்தராம்பாளிடம் இருந்து காா்த்திகேயன் அவரது நண்பா் வினோத் இருவரும் பல்வேறு தவணைகளில் சுமாா் ரூ.2 கோடி வரை பணம் பெற்றுள்ளனா்.
ஆனால், கூறியபடி வேலை வாங்கித் தரவில்லை. பணத்தையும் திருப்பித் தரவில்லை. பணத்தைக் கேட்டபோது அவரது மகனை கொன்றுவிடுவதாக காா்த்திகேயன் மிரட்டியுள்ளாா்.
இதுகுறித்து பெருந்துறை காவல் நிலையத்தில் சுந்தராம்பாள் கடந்த 24- ஆம் தேதி புகாா் அளித்தாா். அதன்பேரில் காா்த்திகேயன், வினோத் மற்றும் கலைவாணன் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.