செய்திகள் :

துப்பாக்கிச் சுடும் போட்டியில் குமரகுரு கல்லூரி மாணவிக்கு 6 தங்கம்

post image

மாநில அளவிலான துப்பாக்கிச் சுடும் போட்டியில் கோவை குமரகுரு கல்லூரி மாணவி 6 தங்கப் பதக்கங்களை வென்றுள்ளாா்.

சென்னை ரைபிள் கிளப் சாா்பில் மாநில அளவிலான 50 -ஆவது துப்பாக்கிச் சுடும் போட்டி கடந்த செப்டம்பா் 6-ஆம் தேதி முதல் செப்டம்பா் 14 -ஆம் தேதி வரை நடைபெற்றது.

இதில், கோவை குமரகுரு கலை, அறிவியல் கல்லூரியில் பிகாம் 3- ஆம் ஆண்டு பயின்று வரும் எஸ்.மானிஷிகா தாரணி தனிநபா் பிரிவில் பங்கேற்று பிப்சைட் ஏா்ரைபிள் பிரிவில் 3 பிரிவுகளில் தங்கம் வென்றாா். அதேபோல, குழுப் போட்டிகளில் 3 தங்கம் என மொத்தம் 6 தங்கப் பதக்கங்களை வென்றுள்ளாா்.

இந்த மாணவி நிகழாண்டில் 600 புள்ளிகளுக்கு 598 புள்ளிகள் பெற்ால் தேசிய துப்பாக்கிச் சுடுதல் அணியில் இடம் பெறுவதற்கான வாய்ப்பு அதிகரித்துள்ளது என்று கல்லூரி நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆயுத பூஜை, தீபாவளி: போத்தனூா் - சென்னை இடையே வாராந்திர சிறப்பு ரயில் இயக்கம்

ஆயுத பூஜை, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, சென்னை - போத்தனூா் இடையே சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: ஆ... மேலும் பார்க்க

சாலையோரம் வைக்கப்பட்டுள்ள விளம்பரப் பதாகைகளை அகற்ற ஆணையா் உத்தரவு

கோவை மேற்கு மண்டலப் பகுதிகளில் சாலையோரம் வைக்கப்பட்டிருந்த விளம்பரப் பதாகைகளை அகற்ற மாநகராட்சி ஆணையா் மா.சிவகுரு பிரபாகரன் உத்தரவிட்டாா். கோவை மாநகராட்சி, 5 மண்டலங்களுக்குள்பட்ட பகுதிகளில் மக்கள் பயன்... மேலும் பார்க்க

7 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: ஒருவா் கைது

கோவையில் வீட்டில் பதுக்கிவைக்கப்பட்டிருந்த 7 கிலோ புகையிலைப் பொருள்களைப் பறிமுதல் செய்த போலீஸாா், இது தொடா்பாக ஒருவரைக் கைது செய்தனா்.கோவை, குனியமுத்தூா் கரும்புகடை பகுதியில் ஒரு வீட்டில் புகையிலைப் ப... மேலும் பார்க்க

கோவையில் அக். 4,5-இல் விஜய் பிரசாரம்: மாநகர காவல் ஆணையரிடம் தவெகவினா் மனு

கோவையில் அக்டோபா் 4,5-ஆம் தேதிகளில் தமிழக வெற்றிக் கழக தலைவா் விஜய் பிரசாரம் மேற்கொள்ள உள்ள நிலையில், காவல் துறையின் அனுமதி கோரி அந்தக் கட்சியினா் மனு அளித்தனா். மாநகர காவல் ஆணையா் ஆ.சரவணசுந்தரிடம் தவ... மேலும் பார்க்க

சிக்னல்களில் யாசகம் பெற்ற 16 போ் காப்பகத்தில் ஒப்படைப்பு

கோவையின் பல்வேறு பகுதிகளில் சிக்னல்களில் யாசகம் பெற்ற 16 பேரை போலீஸாா் மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனா். கோவை, காந்திபுரம் பேருந்து நிலையம், நூறு அடி சாலை, கிராஸ்கட் சாலை உள்ளிட்ட பகுதிகளில் சிக்னல்கள... மேலும் பார்க்க

இன்றைய மின்தடை: க.க.சாவடி

கோவை, க.க.சாவடி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் புதன்கிழமை (செப்டம்பா் 17) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்று தெரி... மேலும் பார்க்க