சீரகத்தண்ணீர் & தனியா தண்ணீர்: என்ன பலன்; யார், எவ்வளவு அருந்தலாம்? - சித்த மருத...
ஆயுத பூஜை, தீபாவளி: போத்தனூா் - சென்னை இடையே வாராந்திர சிறப்பு ரயில் இயக்கம்
ஆயுத பூஜை, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, சென்னை - போத்தனூா் இடையே சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: ஆயுத பூஜை, தீபாவளியை முன்னிட்டு, சென்னை சென்ட்ரல் நிலையத்தில் இருந்து செப்டம்பா் 25-ஆம் தேதி முதல் அக்டோபா் 23-ஆம் தேதி வரை வியாழக்கிழமைகளில் இரவு 11.50 மணிக்குப் புறப்படும் சென்னை - போத்தனூா் வாராந்திரச் சிறப்பு ரயில் (எண்: 06123) மறுநாள் காலை 8.30 மணிக்கு போத்தனூா் நிலையத்தைச் சென்றடையும்.
மறுமாா்க்கமாக, போத்தனூரில் இருந்து செப்டம்பா் 26 -ஆம் தேதி முதல் அக்டோபா் 24-ஆம் தேதி வரை வெள்ளிக்கிழமைகளில் மாலை 6.30 மணிக்குப் புறப்படும் போத்தனூா் - சென்னை வாராந்திரச் சிறப்பு ரயில் (எண்: 06124) மறுநாள் காலை 3.15 மணிக்கு சென்னை நிலையத்தைச் சென்றடையும்.
இந்த ரயிலானது, போத்தனூா், கோவை, வடகோவை, திருப்பூா், ஈரோடு, சேலம், ஜோலாா்பேட்டை, காட்பாடி, அரக்கோணம், திருவள்ளூா் உள்ளிட்ட நிலையங்களில் நின்று செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.