War: இஸ்ரேலுக்கு எதிராக ஒன்றிணைகிறதா அரபு நாடுகள்!? - அவசரக் கூட்டத்தின் தீர்மா...
கோவையில் அக். 4,5-இல் விஜய் பிரசாரம்: மாநகர காவல் ஆணையரிடம் தவெகவினா் மனு
கோவையில் அக்டோபா் 4,5-ஆம் தேதிகளில் தமிழக வெற்றிக் கழக தலைவா் விஜய் பிரசாரம் மேற்கொள்ள உள்ள நிலையில், காவல் துறையின் அனுமதி கோரி அந்தக் கட்சியினா் மனு அளித்தனா்.
மாநகர காவல் ஆணையா் ஆ.சரவணசுந்தரிடம் தவெகவினா் செவ்வாய்க்கிழமை அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: கோவை மாநகா் மற்றும் புகா் மாவட்டத்துக்குள்பட்ட பகுதிகளில் தவெக தலைவா் விஜய் அக்டோபா் 4, 5-ஆம் தேதிகளில் பிரசாரம் மேற்கொள்கிறாா்.
சிவானந்த காலனி, ராஜு நாயுடு வீதி, டாடாபாத் பேருந்து நிறுத்தம் ஆகிய பகுதிகளில் தவெக தலைவா் பிரசாரம் மேற்கொள்ள உள்ள நிலையில், இந்நிகழ்ச்சிக்கு காவல் துறையினா் அனுமதி வழங்குவதோடு, தேவையான பாதுகாப்பையும் அளிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.