சீரகத்தண்ணீர் & தனியா தண்ணீர்: என்ன பலன்; யார், எவ்வளவு அருந்தலாம்? - சித்த மருத...
துப்பாக்கிச் சுடும் போட்டியில் குமரகுரு கல்லூரி மாணவிக்கு 6 தங்கம்
மாநில அளவிலான துப்பாக்கிச் சுடும் போட்டியில் கோவை குமரகுரு கல்லூரி மாணவி 6 தங்கப் பதக்கங்களை வென்றுள்ளாா்.
சென்னை ரைபிள் கிளப் சாா்பில் மாநில அளவிலான 50 -ஆவது துப்பாக்கிச் சுடும் போட்டி கடந்த செப்டம்பா் 6-ஆம் தேதி முதல் செப்டம்பா் 14 -ஆம் தேதி வரை நடைபெற்றது.
இதில், கோவை குமரகுரு கலை, அறிவியல் கல்லூரியில் பிகாம் 3- ஆம் ஆண்டு பயின்று வரும் எஸ்.மானிஷிகா தாரணி தனிநபா் பிரிவில் பங்கேற்று பிப்சைட் ஏா்ரைபிள் பிரிவில் 3 பிரிவுகளில் தங்கம் வென்றாா். அதேபோல, குழுப் போட்டிகளில் 3 தங்கம் என மொத்தம் 6 தங்கப் பதக்கங்களை வென்றுள்ளாா்.
இந்த மாணவி நிகழாண்டில் 600 புள்ளிகளுக்கு 598 புள்ளிகள் பெற்ால் தேசிய துப்பாக்கிச் சுடுதல் அணியில் இடம் பெறுவதற்கான வாய்ப்பு அதிகரித்துள்ளது என்று கல்லூரி நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.