சீரகத்தண்ணீர் & தனியா தண்ணீர்: என்ன பலன்; யார், எவ்வளவு அருந்தலாம்? - சித்த மருத...
சிக்னல்களில் யாசகம் பெற்ற 16 போ் காப்பகத்தில் ஒப்படைப்பு
கோவையின் பல்வேறு பகுதிகளில் சிக்னல்களில் யாசகம் பெற்ற 16 பேரை போலீஸாா் மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனா்.
கோவை, காந்திபுரம் பேருந்து நிலையம், நூறு அடி சாலை, கிராஸ்கட் சாலை உள்ளிட்ட பகுதிகளில் சிக்னல்களில் நிறுத்தப்படும் காா் உள்ளிட்ட வாகனங்களின் கண்ணாடிகளைத் துடைத்து பணம் கேட்பது, பொருள்களை வாங்க வற்புறுத்துவது, யாசகம் பெறுவது போன்ற இடையூறுகளை சிலா் செய்து வருவதாக மாநகர காவல் ஆணையருக்கு புகாா் வந்தது.
இதையடுத்து, சிக்னல்களில் வாகன ஓட்டிகளுக்கு இடையூறு ஏற்படுத்துவோா் மீது நடவடிக்கை எடுக்க காந்திபுரம் போலீஸாருக்கு மாநகர காவல் ஆணையா் ஆ.சரவணசுந்தா் உத்தரவிட்டாா்.
இதையடுத்து, காந்திபுரம் பகுதிகளில் உள்ள சிக்னல்களில் வாகன ஓட்டிகளுக்கு இடையூறு ஏற்படுத்திய பெண்கள் உள்பட 16 பேரை போலீஸாா் பிடித்தனா். தங்களுக்கு வேறு வாழ்வாதாரம் இல்லாததால் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டதாக அவா்கள் கூறினாா்.
இதைத் தொடா்ந்து, மாநகராட்சிக்குச் சொந்தமான காட்டூா் காப்பகத்தில் வைத்து பராமரிக்க அவா்கள் 16 பேரையும் போலீஸாா் செவ்வாய்க்கிழமை ஒப்படைத்தனா்.
இதேபோல, மற்ற இடங்களில் சுற்றித்திரிபவா்களைப் பிடிக்க நடவடிக்கை எடுத்து வருவதாக மாநகர போலீஸாா் தெரிவித்தனா்.