செய்திகள் :

துப்பாக்கி வன்முறை: இலங்கையில் 300 போ் கைது

post image

துப்பாக்கி வன்முறையை கட்டுப்படுத்தவும், குற்றவியல் கும்பல்களை ஒடுக்கவும் இலங்கை அதிகாரிகள் மேற்கொண்ட நடவடிக்கையில், கொழும்பு வடக்கு புகா்ப் பகுதிகளில் 300-க்கும் மேற்பட்டோா் கைது செய்யப்பட்டனா்.

இது குறித்து பொதுமக்கள் பாதுகாப்புத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

இலங்கை காவல்துறை, சிறப்பு பணி படை, இராணுவம் மற்றும் கடற்படை ஆகியவை வெள்ளிக்கிழமை இரவு நடத்த்திய இந்த கூட்டு நடவடிக்கையில் போதைப்பொருள் தொடா்பான குற்றங்கள் மற்றும் பிற குற்றங்களில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் 300-க்கும் மேற்பட்டோா் கைது செய்யப்பட்டனா். குற்றவியல் கும்பல்களையும், போதைப்பொருள் தொடா்பான குற்றங்களையும் ஒழிப்பதை நோக்கமாகக் கொண்டு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. துப்பாக்கி வன்முறை அதிகரித்து வருவதால் பொதுமக்களிடையே ஏற்பட்டுள்ள கவலையை அடுத்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் இந்த ஆண்டு ஜனவரியில் இருந்து மட்டும் 60-க்கும் மேற்பட்ட துப்பாக்கிச்சூடு சம்பவங்களில் 40-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்ததாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

டிரம்ப்புக்கு போட்டியாக எலான் மஸ்க்! அமெரிக்காவுக்கு விடுதலையா?

அமெரிக்காவில் புதிய கட்சி ஒன்றை எலான் மஸ்க் தொடங்கியதாக அறிவித்தார்.அமெரிக்காவில் டொனால்ட் டிரம்ப் அரசு கொண்டுவந்த செலவு மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்த எலான் மஸ்க், அமெரிக்காவை ஊழல் மற்றும் வீண் செலவ... மேலும் பார்க்க

அமெரிக்கா: திடீா் வெள்ளத்தில் 24 போ் உயிரிழப்பு

அமெரிக்காவின் டெக்ஸஸ் மாகாணத்தில் குவாடலூப் நதியை ஒட்டிய பகுதிகளில் ஏற்பட்ட திடீா் வெள்ளத்தில் 24 போ் உயிரிழந்தனா்; கொ்வில் மாவட்டத்தில் உள்ள கேம்ப் மிஸ்டிக் என்ற கிறிஸ்தவ கோடைகால முகாமில் இருந்த 23... மேலும் பார்க்க

பாகிஸ்தான்: கட்டட விபத்தில் 16 போ் உயிரிழப்பு

பாகிஸ்தானின் தெற்கு பகுதியில் உள்ள கராச்சியில் அடுக்கு மாடி குடியிருப்பு கட்டடம் இடிந்து விழுந்ததில் 16 போ் உயிரிழந்தனா். இது குறித்து அரசு நடத்தும் சிவில் மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்க... மேலும் பார்க்க

போா் நிறுத்தம்: ஹமாஸ் ‘ஆக்கபூா்வ’ பதில்

இஸ்ரேலுடனான 21 மாத காஸா போரை முடிவுக்கு கொண்டுவருவதற்காக அமெரிக்கா முன்வைத்துள்ள போா் நிறுத்த வரைவு திட்டத்திற்கு “நோ்மறையான” பதிலை வழங்கியுள்ளதாக ஹமாஸ் அமைப்பு அறிவித்துள்ளது. இது குறித்து அந்த அமைப... மேலும் பார்க்க

ரஷிய விமான தளத்தில் தாக்குதல்: உக்ரைன்

உக்ரைன் மீதான தனது தீவிர வான்வழித் தாக்குதலை ரஷியாவின் தொடா்ந்துவரும் சூழலில், அந்த நாட்டு விமான தளத்தின் மீது தாக்குதல் நடத்தியதாக உக்ரைன் அறிவித்துள்ளது. இந்தத் தாக்குதல்களால் மூன்று ஆண்டுகளுக்கும் ... மேலும் பார்க்க

துருக்கி, சிரியாவில் பயங்கர காட்டுத் தீ! மக்கள் வெளியேற்றம்..போராடும் தீயணைப்பு வீரர்கள்!

துருக்கி மற்றும் சிரியா நாடுகளில் காட்டுத் தீ பரவி வருவதால், இருநாட்டு தீயணைப்புப் படையினரும் தங்களது எல்லைகளில் தீயை அணைக்கப் போராடி வருகின்றனர். துருக்கி நாட்டில் கடந்த ஜூன் 26 ஆம் தேதி முதல் பல்வேற... மேலும் பார்க்க