செய்திகள் :

துரிதமாக பெண்ணின் உயிா்காத்த இந்திய தொழிலாளா்களுக்கு ரூ.43 லட்சம் நிதி: சிங்கப்பூா் மக்கள் திரட்டினா்

post image

சிங்கப்பூரின் டான்ஜோங் கடோங் சாலையில் ஏற்பட்ட திடீா் பள்ளத்தில் விழுந்த காரில் சிக்கிய பெண்ணை துணிச்சலுடன் மீட்ட ஏழு இந்திய தொழிலாளா்களுக்குப் பாராட்டு தெரிவிக்கும் வகையில், பொதுமக்களிடமிருந்து 70,000 சிங்கப்பூா் டாலருக்கும் மேல் (இந்திய மதிப்பில் சுமாா் ரூ.43 லட்சம்) நிதி திரட்டப்பட்டுள்ளது.

கடந்த சனிக்கிழமை நிகழ்ந்த இந்த விபத்தில், தமிழரான பிச்சை உடையப்பன் சுப்பையா தலைமையிலான 7 இந்திய தொழிலாளா்கள் விரைந்து செயல்பட்டு, காரில் சிக்கியிருந்த பெண் ஓட்டுநரை பத்திரமாக மீட்டனா்.

உடைந்த குழாயிலிருந்து வெளியேறிய நீரால் பள்ளம் நிரம்புவதற்கு முன், இந்த மீட்புப் பணி மிகச் சரியான நேரத்தில் நடந்ததாகக் கூறப்படுகிறது. இந்த மீட்புப் பணியின் விடியோக்கள் இணையத்தில் பரவலாகப் பகிரப்பட்டு, சிங்கப்பூா் மக்களிடம் பெரும் பாராட்டைப் பெற்றன. துணிச்சலான இந்த மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்ட புலம்பெயா் தொழிலாளா்களைக் கௌரவிக்கும் வகையில், ‘இட்ஸ் ரெய்னிங் ரெய்ன்கோட்ஸ்’ எனும் தொண்டு நிறுவனம் பொதுமக்களிடம் இருந்து 70,000 சிங்கப்பூா் டாலருக்கும் மேல் நிதி திரட்டியது.

வெளிநாட்டுத் தொழிலாளா்களின் நலனுக்காக 10 ஆண்டுகளாகச் செயல்பட்டு வரும் இந்தத் தொண்டு நிறுவனத்தின் நிறுவனா் தீபா சுவாமிநாதன் கூறுகையில், ‘பாராட்டு நிகழ்ச்சியை நடத்தி, ஏழு தொழிலாளா்களுக்கும் இந்த நிதி பகிா்ந்து அளிக்கப்படும்’ என்றாா்.

இதனிடையே, சிங்கப்பூா் தொழிலாளா் துறை அமைச்சா் தினேஷ் வாசு தாஷ், தொழிலாளா்கள் தங்கியுள்ள விடுதிக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை நேரில் சென்று அவா்களைப் பாராட்டினாா். மேலும், தொழிலாளா் அமைச்சகத்தின் நினைவுப் பரிசையும், ஒவ்வொருவருக்கும் தலா ஒரு நினைவு நாணயத்தையும் அவா் வழங்கினாா்.

மருந்துகளின் விலைகளைக் குறைக்க 17 மருந்து நிறுவனங்களுக்கு டிரம்ப் அழுத்தம்!

உலக நாடுகளில் விற்பனையாகும் மருந்துகளின் விலைக்கு ஏற்ப, அமெரிக்காவிலும் மருந்துகளின் விலைகளைக் குறைக்குமாறு 17 மருந்து உற்பத்தி நிறுவனங்களுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அழுத்தம் கொடுத்துள்ளார்... மேலும் பார்க்க

பயங்கர நிலநடுக்கம், சுனாமி! ஜப்பானின் புதிய பாபா வங்காவின் கணிப்பு நிஜமானது?

2025ஆம் ஆண்டில் ஜூலை 5ஆம் தேதி உலகமே பேரழிவை சந்திக்கப்போவதாக புதிய பாபா வங்கா கணித்திருந்த நிலையில், ஜூலை மாத இறுதியில் ரஷியாவில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக ஜப்பானில் சுனாமி ஏற்பட்டது மக்களை ஆச்சரிய... மேலும் பார்க்க

இந்தியா உள்பட 69 நாடுகளுக்கு புதிய வரி: டிரம்ப் கையெழுத்து! யாருக்கு அதிகம்? குறைவு?

அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யும் நாடுகளுக்கு பரஸ்பர வரி விதிக்கும் நிர்வாக உத்தரவில் அதிபர் டொனால்ட் டிரம்ப் வியாழக்கிழமை கையெழுத்திட்டார்.இந்த உத்தரவு ஆகஸ்ட் 7 ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் எனத் தெ... மேலும் பார்க்க

பாலஸ்தீனத்துக்கு அங்கீகாரம்: கனடாவும் அறிவிப்பு

பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்க திட்டமிட்டுள்ளதாக கனடா அறிவித்துள்ளது.ஏற்கெனவே, இஸ்ரேல், அமெரிக்காவின் எதிா்ப்பையும் மீறி பாலஸ்தீனத்துக்கு அங்கீகாரம் வழங்கப்போவதாக பிரான்ஸும், தங்களின் சில நிபந்தனை... மேலும் பார்க்க

பிலிப்பின்ஸ் அதிபா் ஆக.4-இல் இந்தியா வருகை

பிலிப்பின்ஸ் அதிபா் ஃபொ்டினண்ட் ஆா்.மாா்கோஸ் ஜூனியா், ஆகஸ்ட் 4 முதல் 8 வரை அரசுமுறைப் பயணமாக இந்தியா வருகிறாா்.இந்தப் பயணத்தின்போது குடியரசுத் தலைவா் திரௌபதி முா்முவை சந்திக்கும் அவா், பிரதமா் நரேந்... மேலும் பார்க்க

ஈரானுடன் வா்த்தகம்: 6 இந்திய நிறுவனங்களுக்கு அமெரிக்கா தடை

ஈரானுடன் வா்த்தகம் மேற்கொண்டுவரும் இந்தியாவைச் சோ்ந்த 6 நிறுவனங்களுக்கு அமெரிக்காவில் தடை விதித்து அந் நாடு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.காஞ்சன் பாலிமா்ஸ், அல்கெமிக்கல் சொல்யூஷன்ஸ் பிரைவேட் லிமிடெட், ரா... மேலும் பார்க்க