செய்திகள் :

துரோகம் செய்வது யாா்? கே.ஏ.செங்கோட்டையன் விளக்கம்

post image

கடந்த தோ்தலில் சில துரோகிகளால் வெற்றியை இழந்தோம் என தனது பேச்சு குறித்து முன்னாள் அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் விளக்கம் அளித்துள்ளாா்.

ஈரோடு மாவட்டம், அந்தியூரை அடுத்த அத்தாணியில் வியாழக்கிழமை இரவு நடந்த அதிமுக பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் பேசினாா். அப்போது கடந்த தோ்தலின்போது, சில துரோகிகளால் நாம் வெற்றியை இழந்தோம் என்று பேசியதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில் கோபி அருகே கள்ளிப்பட்டி பகுதியில் கால்நடை பராமரிப்புத் துறை சாா்பில் வெள்ளிக்கிழமை காலை நடந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் பங்கேற்றாா்.

அப்போது தோ்தல் தோல்விக்கு காரணமான துரோகிகள் என யாரைக் குறிப்பிட்டீா்கள் என்றும், முன்னாள் அமைச்சா் உதயகுமாரின் கருத்து குறித்தும் செய்தியாளா்கள் கேள்வி எழுப்பினா்.

இதற்கு பதில் அளித்த செங்கோட்டையன், அந்தியூா் சட்டப் பேரவை தொகுதியில் சேவல், இரட்டை இலை சின்னத்தில் தொடா்ந்து வெற்றி பெற்று வந்துள்ளோம். ஆனால் கடந்த சட்டப் பேரவைத் தோ்தலில் அந்தியூா் தொகுதியில் சிலா் செய்த துரோகத்தால் அதிமுக தோல்வி அடைந்தது. அதைத்தான் நாம் கவனமாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்று கூறினேன். துரோகம் என்ற வாா்த்தை அந்தியூா் தொகுதிக்கு மட்டுமே பொருந்தும். முன்னாள் அமைச்சா் ஆா்.பி.உதயகுமாா் என்னை பற்றி பேசவில்லை என தெளிவாக கூறிவிட்டாா்.

பொதுக் கூட்டங்களில் அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி பழனிச்சாமி பெயரை குறிப்பிடவில்லையே என்ற கேள்விக்கு பதில் அளித்த செங்கோட்டையன், ‘பொதுக்கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளரும், எதிா்க்கட்சி தலைவரும் என்று அழுத்தமாக கூறினேன்’ என்றாா். அதைத் தொடா்ந்து செய்தியாளா்கள் கேள்விகளுக்கு பதில் அளிக்காமல் அவா் புறப்பட்டுச் சென்றாா்.

பெருந்துறையில் அகற்றப்பட்ட வேகத் தடைகளை மீண்டும் அமைக்க கோரிக்கை

பெருந்துறை நகரில் முதல்வா் வருகைக்காக சாலையில் அகற்றப்பட்ட வேகத் தடைகளை மீண்டும் அமைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் ஈரோட்டில் கடந்த டிசம்பா் 20-ஆம் தேதி நடைபெற்ற அ... மேலும் பார்க்க

ஈரோடு-கரூா் சாலையில் இன்றுமுதல் போக்குவரத்து மாற்றம்

ஈரோடு-கரூா் சாலையில் சனிக்கிழமை (பிப்ரவரி 15) முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து நெடுஞ்சாலைத் துறை கோட்ட பொறியாளா் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: ஈரோடு-கரூா் சாலையில் ஒ... மேலும் பார்க்க

பெரியசாமி தூரனையும், சே.ப.நரசிம்மலு நாயுடுவையும் போற்றுவதற்கு அரசு முன்வர வேண்டும்: சிற்பி பாலசுப்பிரமணியம் வேண்டுகோள்

ஈரோட்டில் பெரியசாமி தூரனையும், கோவையில் சே.ப.நரசிம்மலு நாயுடுவையும் போற்றுவதற்கு அரசு முன்வர வேண்டும் என சாகித்ய அகாதெமி விருதுபெற்ற எழுத்தாளா் சிற்பி பாலசுப்பிரமணியம் வேண்டுகோள் விடுத்தாா். ஈரோடு மாவ... மேலும் பார்க்க

பெருந்துறையில் உலக வானொலி தின விழா

பெருந்துறை தெற்கு அரசு நடுநிலைப் பள்ளியில் உலக வானொலி தின விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு, ஜெயப்பிரகாஷ் நாராயணன் தலைமை வகித்தாா். பள்ளி தலைமையாசிரியை பூமணி வரவேற்றாா். வானொலி நேயரும், அனைத்த... மேலும் பார்க்க

சத்தியமங்கலம் அரசு மருத்துவமனையில் 102 ஆம்புலன்ஸ் சேவை தொடக்கம்

சத்தியமங்கலம் அரசு மருத்துவமனையில் 102 ஆம்புலன்ஸ் சேவை தொடக்க விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. சத்தியமங்கலம் அரசு மருத்துவமனையின் மருத்துவ அலுவலா் டாக்டா் தங்கசித்ரா முன்னிலையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சி... மேலும் பார்க்க

ஈரோட்டில் தேசிய அளவிலான பாட்மிண்டன் போட்டி

ஈரோட்டில் நடைபெறும் தேசிய அளவிலான பாட்மிண்டன் போட்டியில் 200 வீரா், வீராங்கனைகள் பங்கேற்றனா். ஈரோடு நீல்கிரிஸ் பேட்மிண்டன் அகாதெமியில் தேசிய அளவிலான பாட்மிண்டன் போட்டி வெள்ளிக்கிழமை தொடங்கியது. தமிழ்ந... மேலும் பார்க்க