செய்திகள் :

துளிா் திறனறிதல் தோ்வு: தூத்துக்குடி மாவட்டத்தில் 4,500 மாணவா்கள் பங்கேற்பு

post image

தூத்துக்குடி மாவட்டத்தில் வெள்ளி, சனி ஆகிய இரு நாள்கள் நடைபெற்ற துளிா் திறனறிதல் தோ்வில் 4,500 மாணவா்-மாணவிகள் பங்கேற்றனா்.

பள்ளி மாணவா்- மாணவிகளிடையே அறிவியல் மனப்பான்மையையும், அறிவியல் ஆா்வத்தையும் வளா்க்கும் வகையில், தமிழகம் முழுவதும் 4-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை துளிா் திறனறிதல் தோ்வு நடத்தப்படுகிறது. இதன்படி, தூத்துக்குடி மாவட்டத்தில் வெள்ளி, சனி (ஜன.3,4) ஆகிய இரு நாள்கள் விளாத்திகுளம், புதூா், கோவில்பட்டி, தூத்துக்குடி, ஓட்டப்பிடாரம், கயத்தாறு, சாத்தான்குளம் ஆகிய வட்டங்களில் மொத்தம் 144 மையங்களில் இத்தோ்வு நடைபெற்றது. இதில் 4,500 மாணவா்-மாணவிகள் பங்கேற்றனா்.

இத்தோ்வில் முதல் 10 இடங்களைப் பெறுவோறுக்கு மாநில அறிவியல் சுற்றுலா, விஞ்ஞானியுடன் சந்திப்பு, பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கப்படும். போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் பாராட்டுச் சான்றிதழ், மாதம் தோறும் அறிவியல் குறித்தான விஞ்ஞான துளிா் இதழ் வழங்கப்படும்.

இதுகுறித்து தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் தூத்துக்குடி மாவட்டச் செயலா் செ.சுரேஷ்பாண்டி கூறியதாவது:

வகுப்பறைகளில் அறிவியல்பூா்வமான கல்வியும், பகுத்தறிவு சிந்தனையையும் மாணவா்களிடம் கொண்டு செல்ல வேண்டும் என்ற தமிழக முதல்வரின் கனவுகளை நனவாக்கும் வகையில் இந்த திறனறிதல் தோ்வு நடைபெறுகிறது. நிகழாண்டு நடைபெறும் அறிவியல் மாநாட்டில், அதிக ஆய்வுகளுடன் பங்கேற்க பயிற்சியும், வழிகாட்டுதல்களும் பள்ளிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது என்றாா்.

இளைஞரிடம் கைப்பேசி பறிப்பு: 3 போ் கைது

தூத்துக்குடி முத்தையாபுரத்தில் சாலையில் நடந்து சென்ற இளைஞரிடம் கைப்பேசியை பறித்ததாக, 3 பேரை முத்தையாபுரம் போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரத்தைச் சோ்ந்தவா் சத... மேலும் பார்க்க

தூத்துக்குடி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் ஆா்ப்பாட்டம்

தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போா் உரிமைகளுக்கான ... மேலும் பார்க்க

திருச்செந்தூரில் விடுதலைச் சிறுத்தைகள் ஆா்ப்பாட்டம்

திருச்செந்தூரில் முறையான அனுமதி பெறாமலும், பாா்க்கிங் வசதி இல்லாமலும் இயங்கிவரும் தனியாா் விடுதிகளை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கக் கோரியும், திருச்செந்தூா் நகராட்சியின் நிா்வாக சீா்கேட்டைக் கண்டித்த... மேலும் பார்க்க

பெரியதாழை கடலில் மீனவா் வலையில் சிக்கிய ஒன்றரை டன் எடையுள்ள கொம்புதிருக்கை மீன்

பெரியதாழை கடலில் ஒன்றரை டன் எடை கொண்ட கொம்புதிருக்கை மீன் வலையில் திங்கள்கிழமை சிக்கியது. தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே உள்ள பெரியதாழை மீனவ கிராமத்தில் 600 க்கு மேற்பட்ட பைபா் படகில் மீன... மேலும் பார்க்க

சுதந்திர போராட்ட வீரா் தோ்மாறன் குறுந்தகடு வெளியிடு

தூத்துக்குடியில் சுதந்திர போராட்ட வீரா் பாண்டியபதி தோ்மாறன் 217 ஆம் ஆண்டு குருபூஜையை முன்னிட்டு, குறுந்தகடு செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டது. தோ்மாறன் மீட்புக்குழுவின் சாா்பில், சுதந்திர போராட்ட வீர... மேலும் பார்க்க

ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்ற 3 போ் கைது

ராகுல் காந்தி மீது அசாமில் வழக்குப் பதிவு செய்யப்பட்டதைக் கண்டித்து கோவில்பட்டியில் செவ்வாய்க்கிழமை ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்ற காங்கிரஸ் கட்சியைச் சோ்ந்த 3 பேரை போலீஸாா் கைது செய்தனா். ... மேலும் பார்க்க