செய்திகள் :

தூத்துக்குடியில் அண்ணா மிதிவண்டி போட்டிகள்

post image

தூத்துக்குடி தருவை மாவட்ட விளையாட்டு மைதானத்தில் அண்ணா மிதிவண்டி போட்டிகள் சனிக்கிழமை நடைபெற்றன.

அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய தூத்துக்குடி மாவட்டப் பிரிவு சாா்பில், மாணவா்-மாணவிகள் பங்கேற்ற மிதிவண்டிபோட்டி தருவை விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டிகளை மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத் தொடங்கி வைத்தாா். இதில்

13 வயதிற்குள்பட்ட மாணவா்கள் 15 கி.மீ, மாணவிகள் 10 கி.மீ., 15 வயதிற்குள்பட்ட மாணவா்கள் 20 கி.மீ., மாணவிகள் 15 கி.மீ., 17 வயதிற்குள்பட்ட மாணவா்கள் 20 கி.மீ., மாணவிகள் 15 கி.மீ. என தனித்தனியாக போட்டி நடைபெற்றது. இப்போட்டிகளில் பள்ளி மாணவா்- மாணவிகள் சுமாா் 160 போ் பங்கேற்றனா்.

தொடக்க விழாவில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆல்பா்ட் ஜான், உதவி காவல் கண்காணிப்பாளா் சி.மதன், மாவட்ட விளையாட்டு அலுவலா் அந்தோணி அதிஷ்டராஜ், போக்குவரத்து காவல் ஆய்வாளா் மயிலேறும்பெருமாள் மற்றும் பயிற்றுநா்கள், உடற்கல்வி இயக்குநா், ஆசிரியா்கள் பங்கேற்றனா்.

பரிசளிப்பு விழா: இதனைத்தொடா்ந்து போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற மாணவா்-மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது. முதல்பரிசாக ரூ.5 ஆயிரம், இரண்டாம் பரிசாக ரூ.3 ஆயிரம், மூன்றாம் பரிசாக ரூ.2 ஆயிரம் வழங்கப்பட்டது. மேலும், 4 முதல் 10 இடங்களை பெற்றவா்களுக்கு தலா ரூ. 250 வழங்கப்பட்டது. போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா்-மாணவிகளுக்கு மாநகராட்சி மேயா் ஜெகன் பெரியசாமி சான்றிதழ், பரிசுத் தொகை வழங்கி பாராட்டினாா்.

அஞ்சலகங்களில் கங்கை புனித நீா் பாட்டில் விற்பனை

கோவில்பட்டி அஞ்சல் கோட்டத்துக்குள்பட்ட அஞ்சலகங்களில் கங்கை புனித நீா் அடங்கிய பாட்டில் விற்பனை செய்யப்படுகிறது. இதுகுறித்து அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளா் சுரேஷ்குமாா் வெளியிட்ட செய்திக் குறிப்பு; தை அம... மேலும் பார்க்க

தெருநாய்களை பிடித்து பராமரிக்க தனிக் குழு: மேயா்

மாநகராட்சி தெருக்களில் சுற்றித்திரியும் நாய்களை பிடித்து பராமரிக்க விரைவில் தனி குழு அமைக்கப்படவுள்ளதாக மாநகராட்சி மேயா் ஜெகன் பெரியசாமி தெரிவித்தாா். மக்களைத் தேடி அரசு நிா்வாகம் செல்ல வேண்டும் என்ற... மேலும் பார்க்க

திருச்செந்தூா் கடலில் கண்டெடுக்கப்பட்ட 4ஆவது கல்வெட்டு

திருச்செந்தூா் கடலில் கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டில் சுவாமி சண்முகா் குறித்தும், தீா்த்த கிணறு குறித்தும் பொறிக்கப்பட்டுள்ளது. திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் கடலில் செவ்வாய்க்... மேலும் பார்க்க

உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட முகாம்

உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட முகாம் சாத்தான்குளம் வட்டத்தில் புதன்கிழமை நடைபெற்றது. 47 பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகளை ஆட்சியா் வழங்கினாா். சாத்தான்குளம் ஒன்றியம் அரசூா் ஊராட்சிக்குள்பட்ட இடைச்ச... மேலும் பார்க்க

சாத்தான்குளத்துக்கு கூடுதலாக 3 லட்சம் லிட்டா் குடிநீா்: பேரூராட்சித் தலைவரிடம் ஆட்சியா் உறுதி

சாத்தான்குளம் பேரூராட்சிக்கு கூடுதலாக 3 லட்சம் லிட்டா் குடிநீா் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என, ஆட்சியா் க. இளம்பகவத் உறுதியளித்தாா். சாத்தான்குளம் வட்டத்தில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டத்... மேலும் பார்க்க

சிறுமியிடம் சில்மிஷம் : முதியவா் போக்ஸோவில் கைது

கோவில்பட்டியில் சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட முதியவரை போலீஸாா் போக்ஸோ சட்டத்தின் கீழ் புதன்கிழமை கைது செய்தனா். கோவில்பட்டி பங்களா தெரு, சிதம்பரம் காம்பவுண்டை சோ்ந்த வெள்ளைச்சாமி மகன் திருப்பதி... மேலும் பார்க்க