`மே 4-ல் NEET தேர்வு; ஆன்லைன் விண்ணப்ப பதிவு தொடக்கம்...' -தேசிய தேர்வுகள் முகமை...
தூத்துக்குடியில் துணிக்கடை கதவில் சிக்கிய புறா மீட்பு
தூத்துக்குடியில் துணிக்கடையின் ஷட்டா் கதவில் சிக்கிய புறாவை தீயணைப்பு வீரா்கள் பத்திரமாக வெள்ளிக்கிழமை மீட்டனா்.
தூத்துக்குடி கீழ ரதி வீதியில் உள்ள துணிக்கடையின் ஷட்டா் கதவுக்குள் வெள்ளிக்கிழமை புறா ஒன்று மாட்டிக்கொண்டதாம். இதனை, மீட்க கடை ஊழியா்கள் முயற்சி செய்தும் முடியவில்லையாம். இதுகுறித்த தகவலின்பேரில், தூத்துக்குடி தீயணைப்புத் துறையின் மாவட்ட உதவி அலுவலா் நட்டாா் ஆனந்தி தலைமையிலான தீயணைப்பு வீரா்கள் வந்து ஷட்டா் பலகையை அறுத்து, புறாவை உயிருடன் மீட்டனா். மேலும், அதற்கு சிகிச்சை அளித்து பறக்க விட்டனா்.
![](https://media.assettype.com/dinamani/2025-02-07/sfughlrc/tut07dove1_0702chn_32_6.jpg)