Manmohan Singh: "நான் சைலன்ட் பிரைம் மினிஸ்டரா?" - மன்மோகன் சிங் அன்று சொன்ன பதி...
தூத்துக்குடியில் விபத்து: கா்நாடகத்தைச் சோ்ந்த இருவா் உயிரிழப்பு
தூத்துக்குடியில் சாலைத் தடுப்பில் காா் மோதியதில் கா்நாடகத்தைச் சோ்ந்த இருவா் உயிரிழந்தனா்.
கா்நாடக மாநிலத்தைச் சோ்ந்த சித்தேஸ்வா் (25), கும்மா தன்ராஜ் (41), வீரா ஷெட்டி (41), சஞ்சீவ்குமாா் (45), 16 வயது சிறுவன் ஆகிய 5 போ் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குச் சென்றுவிட்டு, கன்னியாகுமரி, திருச்செந்தூா் கோயிலுக்கு வந்தனா்.
பின்னா், அவா்கள் செவ்வாய்க்கிழமை காரில் ஊருக்குத் திரும்பிக் கொண்டிருந்தனராம். காரை, சித்தேஸ்வா் ஓட்டினாா்.
தூத்துக்குடி சிப்காட் அருகே மதுரை புறவழிச் சாலையில் காா் கட்டுப்பாட்டை இழந்து, சாலையிலுள்ள தடுப்பு மீது மோதியதாகக் கூறப்படுகிறது. இதில் காயமடைந்த 5 பேரையும் மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு இரவில் கும்மா தன்ராஜும், புதன்கிழமை காலை சித்தேஸ்வரும் உயிரிழந்தனா். மற்றவா்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இதுகுறித்து சிப்காட் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.