செய்திகள் :

தூத்துக்குடி: `எவ்வளவு சொல்லியும் கேட்கல; தினமும் குடிச்சிட்டு தகராறுதான்’ - மகனையே கொலை செய்த தந்தை

post image

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகேயுள்ள தோணுகாலைச் சேர்ந்தவர் பாலமுருகன். கட்டடத் தொழிலாளியான இவரது மனைவி கற்பகம். இவர்களுக்கு 5-ம் வகுப்பு படித்து வரும் பாண்டிச்செல்வி என்ற மகளும், 1-ம் வகுப்பு படித்து வரும் அகிலன் என்ற மகனும் உள்ளனர். பாலமுருகனின் தந்தை பிரியாதரன்  அவருடன் வசித்து வந்தார். கட்டட வேலைக்குச் சென்று வந்த பாலமுருகனுக்கு குடிப்பழக்கம் இருந்துள்ளது. இதனால், அடிக்கடி மனைவி, குழந்தைகளுடன் தகராறில் ஈடுபடுவதும், அடிப்பதுமாக இருந்துள்ளார். இதனை பாலமுருகனின் தந்தை பிரியாதரன் தொடர்ந்து கண்டித்து வந்துள்ளார்.

பிரியாதரன் - கொலை செய்யப்பட்ட பாலமுருகன்

இந்த நிலையில் நேற்று மாலை வேலைக்குச் சென்று வந்த பாலமுருகன் குடிபோதையில் வீட்டிற்கு வந்துள்ளார். வழக்கம் போல் மனைவியிடம் தகராறு செய்துள்ளார். ”வேலைக்குச் சென்று வந்த பணத்தை குடித்து அழித்தால் எப்படி குழந்தைகளை காப்பாற்றுவாய்?” என பிரியாதரன்  கேட்டதற்கு பாலமுருகன் அவரிடமும் தகராறு செய்துள்ளாராம். இதனால் தந்தை, மகன் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பானது. ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனராம்.  பின்னர் அனைவரும் இரவில் சாப்பிட்டுவிட்டு தூங்கச் சென்றனர்.

இந்த நிலையில், அதிகாலையில் சுமார் 5 மணிக்கு எழுந்த பிரியாதரன், தன்னை மகன் தாக்கிய ஆத்திரம் தாங்க முடியாமல் வீட்டின் வெளியே கிடந்த மண்வெட்டியை எடுத்து வந்து தூங்கிக் கொண்டிருந்த பாலமுருகனின் கழுத்தில் ஓங்கி வெட்டினார். இதில், பாலமுருகன் உயிரிழந்தார். ஆனால், மழை பெய்துக் கொண்டிருந்ததால் பாலமுருகனின் அலறல் சத்தம் யாருக்கும் கேட்கவில்லை. காலை 6 மணிக்கு எழுந்த பாலமுருகனின் மகள் பாண்டிச் செல்வி வீட்டிற்கு வெளியே வந்து பார்த்த போது தந்தை ரத்த வெள்ளத்தில் இறந்து கிடப்பதைப் பார்த்து அலறி சத்தம் போட்டுள்ளார்.

உயிரிழந்த பாலமுருகன்

இதற்கிடையில், பிரியாதரன் மண் வெட்டியுடன் மேற்கு காவல் நிலையத்திற்கு நடந்தே சென்று சரண் அடைந்தார்.  “தினமும் குடித்துவிட்டு என் மருமகளையும், பேரப் பிள்ளைகளையும் அடிப்பது எனக்குப் பிடிக்கவில்லை. அக்கம் பக்கத்தினர் எங்களை தவறாகப் பேச ஆரம்பித்தனர். எவ்வளவு முறையோ சொல்லியும்  என் மகன் குடிப்பழக்கத்தை கைவிட வில்லை. என்னை தாக்கிய ஆத்திரத்தில் கொலை செய்தேன்” எனப் போலீஸாரிடம் கூறியுள்ளார் பிரியாதரன்.  அவரை கைது செய்த போலீஸார் தொடர்ந்து விசாரணை செய்து வருகிறார்கள்.     

நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...

https://bit.ly/MaperumSabaithanil

மும்பை: கணவனை ஜாமீனில் எடுக்க, ஒரு மாத மகளை விற்க முயன்ற தாய் - 9 பேர் கைது

மும்பையில் அடிக்கடி குழந்தைகள் கடத்துவது மற்றும் விற்பனை செய்வது போன்ற நிகழ்வுகள் நடக்கிறது.சமீபத்தில் மும்பை தாதர் திலக் மேம்பாலத்திற்கு கீழே இருக்கும் குடிசைப்பகுதியில் வசிக்கும் பெண் ஒருவர் தன் குழ... மேலும் பார்க்க

பெண்டிங் வழக்குகள்: சிறையில் இருந்து தப்பிச்சென்ற டிரக் டீலர் - 22 ஆண்டுகள் ஆச்சு... என்ன நிலவரம்?

ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு வழக்குகள், மாநில, தேசிய அளவில் கவனம் பெறும். நிதி மோசடி தொடங்கி பாலியல் கொடூரங்கள், கொலைகள், சாதிய கொடுமைகள் என பல விஷயங்களுக்கு நாமும் `உச்’ கொட்டி இருப்போம். `அந்த வழ... மேலும் பார்க்க

பிரேத பரிசோதனையில் உயிருடன் எடுக்கப்பட்ட கோழி; அதிர்ந்த மருத்துவர்கள்... அமானுஷ்ய சடங்கால் சோகம்!

சத்திஸ்கர் மாநிலத்தில் கோழியை உயிருடன் விழுங்க முயற்சித்த நபர் மூச்சு திணறி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உடற்கூறாய்வு செய்த மருத்துவர்கள் அவர் விழுங்க முயற்சி செய்த கோழியை மீட்டுள்... மேலும் பார்க்க

நெல்லை: ஒரே சீரியல் எண்; கூட்ட நேரத்தில் கைவரிசை… கள்ள நோட்டு தயாரித்தவர் சிக்கியது எப்படி?

கள்ள நோட்டு..!நெல்லை மாவட்டம், பாபநாசம் மருதம் நகரைச் சேர்ந்தவர் முகம்மது சமீர். இவர் அதே பகுதியில் காய்கறிக்கடை நடத்தி வருகிறார். இவரது கடையில் கூட்டம் அதிகமாக இருந்த போது ஒருவர் வந்து புதிய 100 ரூபா... மேலும் பார்க்க

சேலம்: சிறைச்சாலைக்குள் கஞ்சா சப்ளை; வழக்கறிஞர் மீது வழக்குப்பதிவு - சிறைத்துறை ஆக்‌ஷன்

சேலம் அஸ்தம்பட்டி பகுதியில் அமைந்துள்ளது ஆண்கள் மத்திய சிறைச்சாலை. இதில், தண்டனை கைதிகள், விசாரணை கைதிகள் என 1000 க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் சேலம் பொன்னம்மாபேட்டையைச் சேர... மேலும் பார்க்க

நாக்கைப் பிளவுப்படுத்தி டிரெண்டிங் டாட்டூ - கைதுசெய்யப்பட்ட இருவர்; திருச்சி அதிர்ச்சி!

திருச்சி மாநகரம், வெனிஸ் தெருவை சேர்ந்தவர் ஹரிஹரன். இவர், சத்திரம் பேருந்து நிலையம் அருகே ஏலியன் டாட்டூ என்கிற பெயரில் உடலில் டாட்டூ வரையும் கடை நடத்தி வந்துள்ளார். கடந்த இரண்டு ஆண்டுகளாக அவர் அப்பகுத... மேலும் பார்க்க