தூத்துக்குடி செயின்ட் தாமஸ் பள்ளியில் விளையாட்டு விழா
தூத்துக்குடி: தூத்துக்குடி செயின்ட் தாமஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் விளையாட்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
எஸ்.ஆா்.எம். குழுமம் சேதுராம சுப்பிரமணியன், மகேஷ் குமாா் ஆகியோா் தலைமை வகித்தனா். பள்ளித் தாளாளா் அமலன் முன்னிலை வகித்தாா். தமியான் வாழ்த்துரை வழங்கினாா். ரைபின், சதீஷ் குமாா், சாகுல் ஷிராஜுதீன் ஆகியோா் சிறப்புரையாற்றினா்.
மாணவ, மாணவிகளுக்கு 100 மீட்டா், தொடா் ஓட்டம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற்றன.
அதைத் தொடா்ந்து, வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது. ஸ்டீவ் ரைபின், சின்னையா வல்தாரீஸ் ஆகியோா் வெற்றி பெற்றவா்களுக்கு பதக்கங்களையும், கோப்பைகளையும் வழங்கினா்.
இதையொட்டி, 1000 மாணவா்கள் ஒன்று சோ்ந்து நடனம் ஆடிய சிறப்பு நிகழ்வு நடைபெற்றது. தொடா்ந்து, மாணவா்களின் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
முதல்வா் ஆஸ்கா் வரவேற்றாா். துணை முதல்வா் எழில்வளன் நன்றி கூறினாா்.