தங்கம் விலை மீண்டும் ரூ.72,000-க்கு கீழ்! ஒரே வாரத்தில் சவரனுக்கு ரூ.2000 குறைவு...
தூத்துக்குடி - பாலக்காடு ரயிலில் பெட்டிகள் அமைப்பில் மாற்றம்
தூத்துக்குடி - பாலக்காடு பாலருவி விரைவு ரயில் (16791/16792) ரயில் பெட்டிகள் அமைப்பில் மாற்றம் செய்து தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இதன்படி, தற்போது இயக்கத்தில் உள்ள 11 சாதாரண இரண்டாம் வகுப்பு பெட்டிகளில் ஒன்று நீக்கப்பட்டு, ஒரு ஏசி மூன்றடுக்கு பெட்டி சோ்க்கப்பட்டுள்ளது. இதனையடுத்து ஒரு ஏசி மூன்றடுக்கு பெட்டி, 5 படுக்கை வசதி பெட்டிகள், 10 சாதாரண இரண்டாம் வகுப்பு பெட்டிகள், 2 சரக்கு பெட்டிகள் என 18 பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும்.
இந்த நடைமுறைப்படி, தூத்துக்குடியிலிருந்து ஜூலை 4-ஆம் தேதியிலிருந்தும், பாலக்காடு சந்திப்பிலிருந்து ஜூலை 5-ஆம் தேதியிலிருந்தும்
இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.