செய்திகள் :

தூத்துக்குடி: மனைவி மீது சந்தேகம்; வெட்டிக் கொலை செய்த கணவன் தலைமறைவு.. நடந்தது என்ன?

post image

தூத்துக்குடி மாவட்டம், ஏரல் அருகே உள்ள சாயர்புரம், நம்மாழ்வார் நகரைச் சேர்ந்தவர் மரியசாமுவேல். இவரது மனைவி ஜோஸ்பின். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இருவருக்கும் திருமணமாகி மூத்த மகன் பெங்களூரிலும், இளைய மகன் தென் ஆப்பிரிக்காவிலும் உள்ளனர். இதற்கிடையில் கடந்த சில தினங்களாகவே கணவர் மரியசாமுவேல் மனைவி ஜோஸ்பின் மீது சந்தேகப்பட்டு வந்துள்ளார். இதனால் அவர்கள் இருவருக்கும் இடையே தொடர்ந்து தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

ஜோஸ்பினின் உடல் கிடந்த பாலம்

இந்த நிலையில் நேற்று (21-ம் தேதி) இரவு மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது மரியசாமுவேல் தனது மனைவியை கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார். அதன்பிறகு அதிகாலை நேரத்தில் ஊருக்கு வெளியே உள்ள ஒரு பாலம் வரை மனைவியின் உடலை தரதரவென இழுத்துச் சென்று அங்கு குழி தோண்டி புதைக்க முயன்றுள்ளார். அதற்குள் விடிந்து விட்ட காரணத்தால் மனைவியின் உடலை அங்கேயே போட்டு விட்டு தப்பியோடி உள்ளார்.

இதற்கிடையில் இன்று காலையில் ஜோஸ்பினின் மூத்த மகன் அருள்ராஜ் தனது தாய்க்கு போன் செய்துள்ளார். ஆனால் பல முறை அழைத்தும் அவர்  போனை எடுக்கவில்லை. இதற்கிடையில் தனது தாயின் தம்பியான ஜான்போஸ்கோவுக்கு தகவல் தெரிவித்து வீட்டில் சென்று பார்க்க சொல்லியுள்ளார். அவர் வீட்டில் சென்று பார்த்தபோது வீடு பூட்டப்பட்டிருந்தது.

போலீஸார் விசாரணை

ஆனால், வீட்டின் முன்பு இருந்து ரத்தகரை ஊருக்கு வெளியே வரை கிடந்தது. ரத்தக்கரையை பின்தொடர்ந்து பார்த்தபோது பாலத்தின் கீழ் ஜோஸ்பின் கொலை செய்யப்பட்டு கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இந்த சம்பவம் குறித்து ஏரல் காவல் நிலைய போலீஸார் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் தலைமறைவான கணவர் மரியசாமுவேலை போலீஸார் தேடி வருகின்றனர்.

திருமணம் செய்ய சொன்ன பெண் எஸ்.ஐ; துண்டு துண்டாக வெட்டி கடலில் வீசிய இன்ஸ்பெக்டர் - தண்டனை விவரங்கள்

மும்பை கல்யாண்-ல் உதவி போலீஸ் இன்ஸ்பெக்டராக இருந்தவர் அஸ்வினி. இவரை கடந்த 2016-ம் ஆண்டு தானே இன்ஸ்பெக்டர் அபய் குருந்தர் கடத்திச்சென்று படுகொலை செய்து உடலை பல துண்டுகளாக வெட்டி கடலில் வீசிவிட்டதாக குற... மேலும் பார்க்க

Ex DGP: மிளகாய் பொடி தூவி முன்னாள் காவல்துறை அதிகாரி கொலை; மனைவி, மகள் கைது!

கர்நாடக முன்னாள் காவல்துறைத் தலைவர் ஓம் பிரகாஷின் கொலை வழக்கில் அவரது மனைவி மற்றும் மகள் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டதாக காவல்துறை தெரிவித்திருக்கிறது.பெங்களூருவின் எச்.எஸ்.ஆர். லேஅவுட்டில் வசித்து வ... மேலும் பார்க்க

சென்னையில் மனைவி கண் முன் வெட்டி கொல்லப்பட்ட 'ஏ பிளஸ் ரௌடி' ராஜ்

சென்னை மணலி சின்ன சேக்காடு வேதாச்சலம் தெருவில் வசித்து வந்தவர் ராஜ் என்கிற தொண்டை ராஜ் (40).இவர் எம்.கே.பி. நகர் காவல் நிலைய 'ஏ பிளஸ்' ரௌடி. இவர் கடந்த 20-ம் தேதி மாலை வியாசர்பாடி சத்யமூர்த்தி நகர் மெ... மேலும் பார்க்க

திருச்சி: கட்டிலில் படுத்திருந்த இளைஞர் எரித்துக் கொலை; நள்ளிரவில் அதிர்ச்சி சம்பவம்; பின்னணி என்ன?

திருச்சி மாவட்டம், முசிறி அருகே உள்ள வேலம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன்.இவரது மனைவி செல்வி. இவர்களுக்கு கோபிநாத் (வயது 26) என்ற மகனும், ஒரு மகளும் உள்ளனர்.இருவருக்கும் இன்னும் திருமணம்... மேலும் பார்க்க

விருதுநகர்: மூதாட்டியிடம் செயின் பறிப்பில் ஈடுபட்ட ராணுவவீரர்; விரட்டி பிடித்த மக்கள்; என்ன நடந்தது?

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் நடந்து சென்ற‌ மூதாட்டியிடம் செயின் பறிப்பில் ஈடுபட்டவரை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.இதுகுறித்து போலீஸிடம் விசாரித்தோம். அப்போது, நம்மிடம் பேசியவர்க... மேலும் பார்க்க

மும்பை: வாகனங்களுடன் வாள் வீச்சு சண்டை; ரகளை செய்த சிறுவரை வளைத்துப் பிடித்த போலீஸ்; என்ன நடந்தது?

மாநகராட்சி பேருந்துமும்பை பாண்டூப் பகுதியில் மாநகராட்சி பேருந்து ஒன்று சாலையில் சென்று கொண்டிருந்தபோது அந்த வழியாக வந்த சிறுவர் கையில் வாளுடன் பேருந்தைத் தடுத்து நிறுத்தினார்.அவர் பேருந்து முன்பு நின்... மேலும் பார்க்க