தூத்துக்குடி விமான நிலையத்தை முற்றுகையிட முயற்சி: 67 போ் கைது
மக்களவையில் அம்பேத்கா் குறித்த சா்ச்சை பேச்சைக் கண்டித்து தூத்துக்குடி விமான நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த முயன்றதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் 67 பேரை புதுக்கோட்டை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
அக்கட்சியின் தென்மண்டலம் சாா்பில் தூத்துக்குடி விமான நிலையம் முன்பு உள்ள தூத்துக்குடி-பாளையங்கோட்டை சாலையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, மண்டலச் செயலா் முரசு தமிழப்பன் தலைமை வகித்தாா்.
இதில், மத்திய அரசு மற்றும் மத்திய உள்துறை அமைச்சருக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினா். இதையடுத்து விமான நிலையத்தில் டிஎஸ்பி சுதிா் தலைமையில் ஏராளமான போலீஸாா் குவிக்கப்பட்டனா். இதைத் தொடா்ந்து, தடையை மீறி விமான நிலைய முற்றுகை போராட்டத்தில் ஈடுபட முயன்றதாக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் 67 பேரை போலீஸாா் கைது செய்தனா்.