செய்திகள் :

தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்துக்கு தவெக துணை நிற்கும்!

post image

சென்னை மாநகராட்சித் தூய்மைப் பணிகள் தனியாருக்கு தாரை வார்த்து, தூய்மைப் பணியாளர்களின் வாழ்வாதாரத்தை நாசமாக்கும் நடவடிக்கை வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.

கரோனா போன்ற பெருந்துயர்க் காலங்களிலும், புயல், மழை, வெள்ளம் போன்ற பேரிடர்க் காலங்களிலும் மக்கள் நலனே முக்கியம் என்று கருதி, தங்களின் உயிரைப் பணயம் வைத்துப் பணியாற்றியதில் தூய்மைப் பணியாளர்களின் பங்கு அளப்பரியது.

அப்படி அர்ப்பணிப்பு உணர்வோடு பணியாற்றிய தூய்மைப் பணியாளர்களுக்கு நன்றிக் கடனாக, சென்னை மாநகராட்சியில் தூய்மைப் பணிகளைத் தனியாருக்குத் தாரை வார்த்து, அவர்களின் வாழ்வாதாரத்தை இழக்க வைத்ததே வெற்று விளம்பர மாடல் திமுக அரசின் சாதனை.

தங்கள் வாழ்வாதாரத்தைக் காக்கத் தூய்மைப் பணியாளர்கள் இரவு பகலாகப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களின் அறப் போராட்டத்தைத் தமிழக வெற்றிக் கழகம் முழுமையாக ஆதரிக்கிறது.

பலர் செய்யத் தயங்கக்கூடிய வேலைகளைத்தான் இவர்கள் சேவை மனப்பான்மையுடன் அரவணைத்துச் செய்துகொண்டு, தங்கள் வாழ்க்கையை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். தூய்மைப் பணியாளர்களின் அர்ப்பணிப்பில்தான் மாநகரம் சுத்தமாகிறது, நோய்த்தொற்றுகள் தடுக்கப்படுகின்றன. அவ்வாறு செயல்படும் தூய்மைப் பணியாளர்களின் கோரிக்கைகளுக்கு, கொடுத்த வாக்குறுதியின்படி செவி சாய்ப்பதே அரசின் கடமை.

எதிர்க்கட்சியாக இருந்தபோது தூய்மைப் பணியாளர்களைப் பணி நிரந்தரம் செய்வதாக வாக்குறுதி அளித்த வெற்று விளம்பர மாடல் திமுக, தற்போது வழக்கம் போல வாக்குறுதியைக் காற்றில் பறக்கவிட்டு, அவர்களின் வாழ்வாதாரத்தை நாசமாக்கி, நடுத்தெருவில் போராடும் நிலைக்குத் தள்ளிவிட்டது கண்டிக்கத்தக்கது.

திமுகவின் தேர்தல் வாக்குறுதி எண் 153இன் படியும், அவர்களைப் பணி நிரந்தரம் செய்து, கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும்.

தங்கள் உடல்நலம் குறித்துக் கொஞ்சமும் கவலை கொள்ளாமல் அர்ப்பணிப்பு உணர்வோடு பணியாற்றி வரும் எளியவர்களான தூய்மைப் பணியாளர்களின் அறவழிப் போராட்டத்திற்கும் சட்டப் போராட்டத்திற்கும் தமிழக வெற்றிக் கழகம் உறுதியாகத் துணை நிற்கும் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க |மதுரை தவெக மாநாட்டிற்கு காவல் துறை அனுமதி!

We will continue to support the sanitation workers' struggle TVK vijay

தமிழகத்தில் ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்!

தமிழகத்தில் 4 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடம் மாற்றப்பட்டுள்ளனர். திருச்சி டிஐஜி பதவி வகித்த வருண்குமார் சிபிசிஐடி டிஐஜி பணியிடத்துக்கு மாற்றப்பட்டுள்ளார்.சிவில் டிஃபென்ஸ் ஹோம்கார்ட்ஸ் டிஜிபியாக பிரமோத்கும... மேலும் பார்க்க

சுதந்திர நாள் விடுமுறை: கூடுதல் பேருந்துகள் இயக்கம்!

சுதந்திர நாளையொட்டி தொடர் விடுமுறை வருவதால், வெளியூர் செல்பவர்கள் வசதிக்காக சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. ஆக. 15 முதல் சுதந்திர நாள் மற்றும் அதற்கு அடுத்த இரு நாள்களும் வார இறுதி நாள் என்பதால... மேலும் பார்க்க

முதல்வர் மு. க. ஸ்டாலின் - மகாராஷ்டிர ஆளுநர் சந்திப்பு!

சென்னை: தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலினிடம் மகாராஷ்டிர ஆளுநர் சி. பி. ராதாகிருஷ்ணன் நலம் விசாரித்தார். சென்னையில் முதல்வரை முகாம் அலுவலகத்தில் இன்று(ஆக. 11) சந்தித்து சி. பி. ராதாகிருஷ்ணன் பேசினார். அரச... மேலும் பார்க்க

மதுரை தவெக மாநாட்டிற்கு காவல் துறை அனுமதி!

மதுரையில் நடைபெறவுள்ள தமிழக வெற்றிக் கழக மாநாட்டிற்கு காவல் துறை பாதுகாப்பு அனுமதி வழங்கியுள்ளதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் என். ஆனந்த் தெரிவித்துள்ளார். மேலும் பார்க்க

கவின் கொலை வழக்கு: சுர்ஜித், தந்தைக்கு 2 நாள் சிபிசிஐடி காவல்

கவின் கொலை வழக்கில் கைதான சுர்ஜித் மற்றும் அவரின் தந்தை சரவணனை 2 நாள்கள் சிபிசிஐடி காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி கோரியிருந்த நிலையில்... மேலும் பார்க்க

பாலியல் வன்கொடுமை: கராத்தே பயிற்சியாளர் குற்றவாளி எனத் தீர்ப்பு!

பாலியல் வன்கொடுமை வழக்கில் கராத்தே பயிற்சியாளர் கெபிராஜ் குற்றவாளி என சென்னை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.சென்னை அண்ணாநகரில் கராத்தே பயிற்சி பள்ளி நடந்தவர் கெபிராஜ். இவர் தனியார் பள்ளியில் பணி... மேலும் பார்க்க