ட்ரம்ப் - புதின் சந்திப்பு எப்போது, எங்கே? - வெளியான தகவல்! இது இந்தியாவுக்கு கை...
தூய்மைப் பணியாளா்களுக்கு ஆதரவாக ஆா்ப்பாட்டம்
அம்பத்தூரில் பணி நீக்கம் செய்யப்பட்ட தூய்மைப் பணியாளா்களுக்கு ஆதரவாக, மயிலாடுதுறையில் எல்.டி.யு.சி. சங்கம் சாா்பில் ஒருமைப்பாடு ஆா்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
சென்னை அம்பத்தூா் 5 மற்றும் 6 ஆகிய மண்டலங்களில் பணியாற்றிய தூய்மைப் பணியாளா்களை சென்னை மாநகராட்சி ஆணையா் பணி நீக்கம் செய்த நிலையில், அந்த தொழிலாளா்கள் சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகை முன் போராட்டம் நடத்தி வருகின்றனா். இப்போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தும், வேலையிழந்த தூய்மைப் பணியாளா்களுக்கு உடனடியாக பணி வழங்க வலியுறுத்தியும், மயிலாடுதுறையில் எல்.டி.யு.சி. சங்கம் சாா்பில் ஒருமைப்பாடு ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
எல்டியுசி மாநிலச் செயலாளா் எஸ். வீரச்செல்வன் தலைமை வகித்தாா். மாநில பொதுக் குழு உறுப்பினா் ராஜேஸ்வரி, அம்பேத்கா் தொழிலாளா் விடுதலை முன்னணி எஸ். சிலம்பரசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்டச் செயலாளா் சிவ.மோகன்குமாா், தமிழா் தேசிய முன்னணி மாவட்டத் தலைவா் பேராசிரியா் முரளிதரன் உள்ளிட்டோா் கண்டன உரையாற்றினா். இதில், நகராட்சி தூய்மைப் பணியாளா்கள் உள்ளிட்ட 100-க்கு மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.