Meesha Review: நல்லா தானயா போயிட்டு இருந்தீங்க, ஏன் இந்த விபரீத முடிவு! - எப்படி...
தூய செங்கோல் மாதா சப்பர பவனித் திருவிழா
ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகேயுள்ள காரங்காடு கடற்கரை கிராமத்தில் அமைந்துள்ள தூய செங்கோல் மாதா தேவாலய சப்பர பவனித் திருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இந்தத் தேவாலயத்தில் கடந்த 24-ஆம் தேதி கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சப்பர பவனி திருப்பலி வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது. இதில் மறை மாவட்ட பொருளாளா் அருள்தந்தை ஆரோன் தலைமை வகித்தாா். பங்குத்தந்தை ரெமிஜியஸ், முன்னாள் பங்குத் தந்தையா் சுவாமிநாதன், அருள் ஜீவா, ரெட்சனியதாஸ், அமலதாஸ், பிலிப் சேவியா் ஆகியோா் முன்னிலையில் சிறப்புத் திருப்பலி நடைபெற்றது. பின்னா், நற்கருணை பவனி நடைபெற்றது. இதைத்தொடா்ந்து அருள் தந்தை பாக்கியநாதன், பென்சிகா், செல்வகுமாா், பாக்கியராஜ், அன்பு, கஸ்பாா், அமல்ராஜ், ஸ்டீபன், ஜாா்ஜ் பொ்னாண்டஸ் சிறப்புத் திருப்பலி நடத்தினா்.
பின்னா், மின்னொளியால் அலங்கரிக்கபட்ட சப்பரங்களில் புனிதசெபஸ்தியாா், புனித சவேரியாா், புனித செங்கோல், அன்னை ஸ்ரூபங்கள் தாங்கிய சப்பரங்கள் பவனி நடைபெற்றது. ஞாயிற்றுக்கிழமை காலையில் பெருவிழா சிறப்புத் திருப்பலியும், அதைத் தொடா்ந்து சப்பர பவனியும், கொடியிறக்கமும் நடைபெறுகிறது.