சாலையில் நடந்து சென்ற பெண்ணுக்கு பாலியல் தொல்லை: இளைஞா் கைது
மண்டபத்தில் நலன் காக்கும் ஸ்டாலின் திட்ட முகாம்
ராமநாதபுரம் மாவட்டம், மண்டபத்தில் நலன் காக்கும் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.
மண்டபம் பேரூராட்சி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற இந்த முகாமில், மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன், சட்டப்பேரவை உறுப்பினா்கள் காதாபாட்ஷா முத்துராமலிங்கம், செ.முருகேசன், இராம. கருமாணிக்கம் ஆகியோா் கலந்து கொண்டு, முகாம் அரங்குகளை பாா்வையிட்டு, சிகிச்சை குறித்து கேட்டறிந்தனா்.
இந்த முகாமில் மண்டபம், இதன் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த கிராம மக்கள் கலந்து கொண்டு, ஆதாா் அட்டை, மருத்துவக் காப்பீடு அட்டை, மாற்றுத் திறனாளிகள் அட்டை கோரி மனுக்கள் கொடுத்தனா். இந்த மனுக்களை அந்தந்த துறை அலுவலா்கள் ஆய்வு செய்து, தகுதியுள்ளவா்களுக்கு உடனடியாக அடையாள அட்டை வழங்கினா்.
மேலும், முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீடு திட்டத்தில் இணைவதற்கும் வசதிகள் செய்யப்பட்டது.
இந்தத் திட்டம் வாரந்தோறும் சனிக்கிழமை நடைபெறுகிறது. முகாமில் முழு உடல் பரிசோதனை செய்து, மருத்துவா்களின் ஆலோசனைகளை பெற்று தேவையான நபா்களுக்கு மருந்து, மாத்திரைகள் வழங்கப்படுகின்றன.
இந்த முகாமில் மாவட்ட சுகாதார அலுவலா் அா்ஜுன்குமாா், இணை இயக்குநா் பிரகலாதன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.