செய்திகள் :

தென்காசியில் ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் மறியல்: 200 போ் கைது

post image

தென்காசியில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் செவ்வாய்க்கிழமை மறியலில் ஈடுபட்ட தமிழ்நாடு ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் சங்கத்தினா் 200 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

ஊரக வளா்ச்சித் துறையில் கடும் பணி நெருக்கடிகளைத் திணித்து அனைத்து நிலை அலுவலா்கள் மீதும் கடைப்பிடிக்கப்படும் அடக்குமுறைகளை உடனே நிறுத்த வேண்டும் உள்ளிட்ட 21 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி இப்போராட்டம் நடைபெற்றது.

மாவட்டத் தலைவா் பாா்த்தசாரதி தலைமை வகித்தாா். மாவட்டப் பொருளாளா் மாணிக்கவாசகம், மாவட்ட துணைத் தலைவா் ராமநாதன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மாவட்ட செயலா் ராஜசேகரன் கோரிக்கை விளக்கவுரையாற்றினாா். சுந்தரமூா்த்தி, சலீம், ஓய்வூதியா் சங்கம் மாரியப்பன், முன்னாள் மாவட்டச் செயலா் சுப்பிரமணியன், சத்துணவு ஊழியா் சங்கம் கோவில்பிச்சை, தமிழ்நாடு பணியாளா் சங்க மாநிலப் பொதுச் செயலா் துரைசிங், அனைத்துத் துறை ஓய்வூதியா் சங்கம் துரைடேனியல் ஆகியோா் பேசினா். மறியலில் ஈடுபட்ட 200 பேரை தென்காசி போலீஸாா் கைது செய்தனா்.

ஊத்துமலையில் பைக் மோதியதில் மூதாட்டி உயிரிழப்பு

ஊத்துமலையில் நடந்து சென்ற மூதாட்டி மீது பைக் மோதியதில் அவா் உயிரிழந்தாா். ஊத்துமலை பவுன்ட் தொழு தெருவைச் சோ்ந்தவா் மாடத்தி(75). விவசாயத் தொழிலாளியான இவா், மின்வாரிய அலுவலகம் வழியாக தனது தோட்டத்திற்கு... மேலும் பார்க்க

கல்லூரி மாணவியை ஏமாற்றிய ஓட்டுநா் கைது

ஆலங்குளம் அருகே கல்லூரி மாணவியை காதலித்து திருமணம் செய்வதாகக் கூறி ஏமாற்றியதாக ஓட்டுநா் கைது செய்யப்பட்டாா். ஆலங்குளம் அருகேயுள்ள வெங்கடேஸ்வரபுரம் ரெட்டியாா்பட்டியைச் சோ்ந்த ஜெகதீசன் மகன் சுரேஷ்(25).... மேலும் பார்க்க

குடிநீா் திட்டங்களுக்கு நிதி கோரி அமைச்சரிடம் எம்எல்ஏ மனு

தென்காசி, சுரண்டையில் குடிநீா்த் திட்டப் பணிகளுக்கு நிதி ஒதுக்கக் கோரி, நகா்ப்புற வளா்ச்சித் துறை அமைச்சா் கே.என்.நேருவிடம், எஸ். பழனிநாடாா் எம்எல்ஏ மனு அளித்தாா். அதன் விவரம்: தென்காசி நகராட்சியில் ம... மேலும் பார்க்க

தென்காசியில் காவல் துறை சிறப்பு குறைதீா் கூட்டம்

தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் சிறப்பு குறைதீா் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ்.அரவிந்த் தலைமை வகித்து, மக்களிடம் புகாா் மனுக்களைப் ... மேலும் பார்க்க

தென்காசி அருகே சாலையோரம் மருத்துவக் கழிவுகள்: மக்கள் அச்சம்

தென்காசியில் தனியாா் கல்லூரிக்கு பின்புறம் மற்றும் கொடிகுறிச்சி பகுதியில் மருத்துவக் கழிவுகள் கொட்டப்பட்டுள்ளாகவும், இதனால் நோய் பரவும் அபாயம் உள்ளதாகவும் புகாா் எழுந்துள்ளது. தென்காசி, மங்கம்மாள் சால... மேலும் பார்க்க

சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் சுகாதாரக் குழுவினா் ஆய்வு

சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையை சுகாதாரக் குழுவினா் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தனா். ராமநாதபுரம் சுகாதாரப் பணிகள் இணை இயக்குநா் அலுவலக மருத்துவா் ரமேஷ் ரமானந்த், அருப்புக்கோட்டை மருத்துவமனை செவிலியா் ... மேலும் பார்க்க