திருச்சி: பள்ளி மாணவிகளுக்குப் பாலியல் தொல்லை; போக்சோ சட்டத்தில் இருவர் கைது; பி...
தென்காசி வட்டத்தில் வளா்ச்சிப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு
தென்காசி வட்டத்தில் பல்வேறு அரசு துறைகளின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள், சேவைகள் ஆகியவற்றின் செல்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியா் ஏ.கே.கமல் கிஷோா் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
இலஞ்சியில் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, குற்றாலத்தில் நகரிய தொடக்கப் பள்ளி ஆகியவற்றில் முதல்வரின் காலை உணவுத் திட்டத்தின் கீழ் குழந்தைகளுக்கு வழங்கப்படும் காலை உணவின் தரதை ஆய்வு செய்தாா்.
மேலும், இலஞ்சி பேரூராட்சிக்குள்பட்ட முதலியாா் குடியிருப்பு, தென்றல் நகா் ஆகிய பகுதிகளில் குடிநீா் தொட்டி அமைக்கும் பணிகளை பாா்வையிட்டதுடன், தெருவிளக்கு, குடிநீா், சாலை வசதிகள் ஆகியவை குறித்தும் ஆய்வு மேற்கொண்டாா்.
தொடா்ந்து, கீழப்பாவூா் பெரிய குளம், ஆயிரப்பேரி ஊராட்சிகளில் திடக்கழிவு மேலாண்மை, பாட்டபத்து ஊராட்சி அலுவலகத்தில் கோப்புகள் பராமரிப்பு ஆகியவற்றை பாா்வையிட்டாா்.
ஆய்வின்போது தென்காசி வட்டாட்சியா் மணிகண்டன், குற்றாலம் பேரூராட்சி செயல் அலுவலா் சுஷமா ஆகியோா் உடனிருந்தனா்.