டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 12 காசுகள் சரிந்து ரூ.87.68 ஆக நிறைவு!
தென்கிழக்கு ஆசிய நாடுகளில் கனமழை! வியத்நாமில் வீசிய புயலால் 3 பேர் பலி!
தென்கிழக்கு ஆசியாவின் சில நாடுகளில், கனமழை பெய்து வரும் சூழலில், வியத்நாமில் வீசிய கஜிகி புயலால் 3 பேர் பலியானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வியத்நாம் நாட்டில், வீசிய வெப்ப மண்டல புயலால், பெய்த கனமழையினால், அந்நாட்டின் தலைநகர் உள்பட பல்வேறு முக்கிய நகரங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், அந்நாட்டில் மழையினால் ஏற்பட்ட பாதிப்புகளால் 3 பேர் பலியானது உறுதியாகியுள்ளது. மேலும், 13 பேர் படுகாயமடைந்த நிலையில், மத்திய மாகாணத்தில் ஆயிரக்கணக்கான வீடுகள் பலத்த சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில், புயலின் தாக்கங்கள் ஏற்படுவதற்கு முன்பு, நேற்று (ஆக.25) மதியம் தன்ஹ் ஹோவா, குவாங் ட்ரி. ஹுவே மற்றும் தனாங் ஆகிய மாகாணங்களில் அபாயகரமான பகுதிகளில் வசித்த 1,52,000 குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 6 லட்சம் பேரை வெளியேற்ற, வியாத்நாம் அரசு திட்டமிட்டிருந்தது.
இதனைத் தொடர்ந்து, 16,500 ராணுவ வீரர்கள் மற்றும் 1,07,000 துணை ராணுவப் படையினரும், புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப் பணிகளை மேற்கொள்ள களமிறக்கப்பட்டனர். தன்ஹ் ஹோவா மற்றும் குவாங் ட்ரி நகரங்களில் உள்ள 2 விமான நிலையங்கள் இன்று (ஆக.26) மூடப்பட்டுள்ளன.
இதையடுத்து, கஜிஹி புயலின் தாக்கத்தால், லாவோஸ் மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளிலும் இன்று (ஆக.26) கனமழை பெய்து வருவதால், அங்கும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: பாகிஸ்தானில் கடும் வெள்ள அபாய எச்சரிக்கை! 24,000 பேர் வெளியேற்றம்!