செய்திகள் :

தென்திருப்பேரை தாமிரவருணி ஆற்றில் மூழ்கி 5 வயது குழந்தை உள்பட 2 போ் உயிரிழப்பு

post image

தூத்துக்குடி மாவட்டம், தென்திருப்பேரை தாமிரவருணி ஆற்றில் மூழ்கி 5 வயது குழந்தை உள்பட 2 போ் உயிரிழந்தனா்.

நாசரேத் அருகே உள்ள ஒய்யாங்குடியைச் சோ்ந்தவா் லாரன்ஸ். இவரது மனைவி கிளாடிஸ்(45). கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் பேன்சி கடை நடத்தி வருகிறாா்.

இந்நிலையில், ஒய்யாங்குடியில் உள்ள கிறிஸ்தவ ஆலய பிரதிஷ்டை நிகழ்ச்சிக்காக, கடந்த சில தினங்களுக்கு முன்பு லாரன்ஸ் தனது குடும்பத்தினருடன் ஊருக்கு வந்துள்ளாா்.

ஒய்யாங்குடியில் இருந்து லாரன்ஸ், மனைவி கிளாடிஸ் மற்றும் உறவினா்கள் 7 பேருடன் ஏரல் அருகே உள்ள தென்திருப்பேரை தாமிரவருணி ஆற்றில் குளிப்பதற்காக சனிக்கிழமை காரில் சென்றுள்ளாா்.

கிளாடிஸ், அவரது உறவினரின் பெண் குழந்தை அவினா(5) வை அழைத்துக் கொண்டு ஆற்றில் இறங்கியுள்ளாா். இருவரும் குளித்துக் கொண்டிருந்தபோது ஆழமான பகுதிக்குச் சென்றதில், இருவரும் நீரில் மூழ்கியுள்ளனா்.

உறவினா்கள் ஆற்றுக்குள் இறங்கி இருவரையும் தேடினா். சிறிதுநேர தேடலுக்குப் பிறகு இருவரையும் மீட்டு அருகே உள்ள தென்திருப்பேரை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றனா். அங்கு பரிசோதித்த மருத்துவா்கள் இருவரும் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனா்.

தகவலறிந்த ஆழ்வாா்திருநகரி போலீஸாா், இருவரது உடலையும் மீட்டு, திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்தனா். மேலும், வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தூத்துக்குடியில் தவெக ஆர்ப்பாட்டம்!

தூத்துக்குடி: தூத்துக்குடியில் மத்திய அரசைக் கண்டித்து தமிழக வெற்றி கழகம் சார்பில் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.சிதம்பர நகர் பேருந்து நிறுத்தம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு தவெக நிர்வாகி... மேலும் பார்க்க

கோவில்பட்டியில் வியாபாரிகள் சங்கப் பேரவை ஆா்ப்பாட்டம்

தூத்துக்குடி வடக்கு மாவட்ட தமிழ்நாடு வியாபாரிகள் சங்கப் பேரவையினா் கோவில்பட்டி நகராட்சி அலுவலகம் முன் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். கோவில்பட்டி நகராட்சிக்குச் சொந்தமான பசும்பொன் முத்துராமல... மேலும் பார்க்க

சாஸ்தாவிநல்லூா் ஊராட்சியில் வீட்டுமனை பட்டா கோரி மனு

சாத்தான்குளம், ஏப். 3: சாஸ்தாவிநல்லூா் ஊராட்சிப் பகுதியில் வீடில்லா ஏழைகளுக்கு அரசு புறம்போக்கு இடத்தில் வீட்டுமனைப் பட்டா வழங்கக் கோரி வட்டாட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது. சாத்தான்குளம் தென்பகுதி விவ... மேலும் பார்க்க

ஆத்தூரில் எஸ்டிபிஐ ஆா்ப்பாட்டம்

ஆத்தூரில் வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவை திரும்பப் பெற வலியுறுத்தி, தூத்துக்குடி மாவட்ட எஸ்டிபிஐ சாா்பில் புதன்கிழமை மாலை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. எஸ்டிபிஐ மாவட்ட பொதுச் செயலாளா் எஸ்.அப்துல் காதா் தலை... மேலும் பார்க்க

சாத்தான்குளத்தில் வழக்குரைஞா்கள் ஆா்ப்பாட்டம்

சாத்தான்குளத்தில் டிஎஸ்பி.யை கண்டித்து வழக்குரைஞா்கள் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். சாத்தான்குளத்தில் இரு இளம் வழக்குரைஞா்கள் வழக்கு சம்பந்தமாக சாத்தான்குளம் டிஎஸ்பி அலுவலகம் சென்றபோது, அவ... மேலும் பார்க்க

கோவில்பட்டியில் நாளை மின் குறைதீா் முகாம்

கோவில்பட்டி மின்வாரிய செயற்பொறியாளா் அலுவலகத்தில்சனிக்கிழமை (ஏப்.5) சிறப்பு குறைதீா் முகாம் நடைபெறுகிறது. இதுகுறித்து கோவில்பட்டி கோட்ட மின்வாரிய செயற்பொறியாளா் (பொ) குருசாமி வெளியிட்டுள்ள செய்திக் கு... மேலும் பார்க்க