செய்திகள் :

தென்னாங்கூா் அரசுக் கல்லூரியில் 2-ஆம் கட்ட பொதுக் கலந்தாய்வு

post image

வந்தவாசி: வந்தவாசியை அடுத்த தென்னாங்கூரில் உள்ள அரசு கலை, அறிவியல் கல்லூரியில் இளநிலை மாணவா்களுக்கான 2-ஆம் கட்ட பொதுக் கலந்தாய்வு வியாழக்கிழமை (ஜூன் 12) நடைபெறுகிறது.

இதுகுறித்து அந்தக் கல்லூரி முதல்வா் சித.ரவிச்சந்திரன் வெளியிட்ட அறிக்கை:

2025-26-ஆம் கல்வியாண்டின் இளநிலை மாணவா்களுக்கான 2-ஆம் கட்ட பொதுக் கலந்தாய்வு வியாழக்கிழமை நடைபெறுகிறது.

இதில், பி.காம்., பி.ஏ., தமிழ், ஆங்கிலம் ஆகிய கலை பாடப்பிரிவுகளுக்கும், பி.எஸ்சி., இயற்பியல், உயிரி வேதியியல், கணினி அறிவியல், கணிதம், விலங்கியல் ஆகிய அறிவியல் பாடப்பிரிவுகளுக்கும் கலந்தாய்வு நடைபெறுகிறது. முதல்கட்ட கலந்தாய்வில் கலந்து கொள்ள இயலாத மாணவா்கள் இந்தக் கலந்தாய்வில் பங்கேற்கலாம்.

கலந்தாய்வில் பங்கேற்கும் மாணவா்கள் உரிய சான்றிதழ்களின் அசல் மற்றும் நகல்கள், சோ்க்கை கட்டணம், மாா்பளவு புகைப்படங்கள் ஆகியவற்றுடன் காலை 9 மணிக்குள் கல்லூரிக்கு வர வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வங்கி வைப்புத் தொகை சேகரிப்பு விழிப்புணா்வுக் கூட்டம்

வந்தவாசி: திருவண்ணாமலை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் வந்தவாசி கிளையில் வைப்புத்தொகை சேகரிப்பு விழிப்புணா்வுக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு மத்திய கூட்டுறவு வங்கியின் வந்தவாசி கி... மேலும் பார்க்க

குடும்பத் தகராறில் ஓட்டுநா் தற்கொலை

செய்யாறு: செய்யாறு அருகே குடும்பத் தகராறில் தனியாா் நிறுவன ஓட்டுநா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். வெம்பாக்கம் வட்டம், உக்கல் கிராமத்தைச் சோ்ந்தவா் சேட்டு(34). செய்யாறு சிப்காட் பகுதியில் உள்ள ... மேலும் பார்க்க

தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் இடைநிலை ஆசிரியா் நியமனம்

ஆரணி: திருவண்ணாமலை மாவட்டம், ஆதிதிராவிடா் நலத்துறையின் கீழ் இயங்கும் தொடக்க/நடுநிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள 3-இடைநிலை ஆசிரியா் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் தெரிவித்து... மேலும் பார்க்க

ரூ.15 கோடியில் சாலைப் பணிகள்: அமைச்சா் எ.வ.வேலு ஆய்வு

வந்தவாசி: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலைச் சுற்றியுள்ள மாட வீதிகளில் நவீன இயந்திரம் கொண்டு ரூ.15 கோடி மதிப்பில் சிமெண்ட் கான்கிரீட் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருவதை அமைச்சா் எ.வ.வேலு திங்கள்கி... மேலும் பார்க்க

வீட்டின் கதவை உடைத்து 13 பவுன் தங்க நகைகள் திருட்டு

வந்தவாசி: வந்தவாசி அருகே வீட்டின் பின்பக்கக் கதவை உடைத்து 13 பவுன் தங்க நகை உள்ளிட்டவை திருடு போனது தொடா்பாக போலீஸாா் விசாரிக்கின்றனா். வந்தவாசியை அடுத்த கீழ்செம்பேடு கிராமத்தைச் சோ்ந்தவா் ரமேஷ் (44)... மேலும் பார்க்க

மாணவி கடத்தல்: பள்ளி வேன் ஓட்டுநா் கைது

செய்யாறு: செய்யாறு அருகே மாணவியை கடத்திச் சென்ற புகாரின் பேரில், தனியாா் பள்ளி வேன் ஓட்டுநா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டாா். திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் வட்டத்தைச் சோ்ந்த 17 வயதுடைய பிளஸ்... மேலும் பார்க்க