செய்திகள் :

"தென்னிந்தியர்களின் டான்ஸ் பார்களால் மகாராஷ்டிர கலாசாரம் கெட்டது" - சிவசேனா எம்எல்ஏ சர்ச்சை பேச்சு

post image

மும்பையில் உள்ள எம்.எல்.ஏ விடுதியில் இருக்கும் கேண்டீனில் வழங்கப்பட்ட சாப்பாடு தரமானதாக இல்லை என்று கூறி கேண்டீன் உரிமையாளரை சிவசேனா எம்.எல்.ஏ.சஞ்சய் கெய்க்வாட் அடித்த வீடியோ சமூக வலைத்தளத்தில் பரவி வைரலானது.

இச்சம்பவத்தைத் தொடர்ந்து கேண்டீன் உரிமையாளர் மீது மாநில அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. கேண்டீன் லைசென்ஸை ரத்து செய்துள்ளது. ஆனால் எம்.எல்.ஏ சஞ்சய் கெய்க்வாட் மீது மாநில அரசு எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

சஞ்சய் கெய்க்வாட்டும் தனது செயலுக்காக மன்னிப்பும் கேட்கவில்லை. இந்நிலையில் தற்போது அதே எம்.எல்.ஏ. மீண்டும் சர்ச்சைக்குரிய வகையில் பேசி இருக்கிறார். இம்முறை தென்னிந்தியர்களை விமர்சனம் செய்துள்ளார்.

சஞ்சய் கெய்க்வாட்
சஞ்சய் கெய்க்வாட்

இது தொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டியில், ''கேண்டீன் உரிமையாளர் தென்னிந்தியாவைச் சேர்ந்தவர். அப்படி இருக்கும் போது தென்னிந்திய கேண்டீன் உரிமையாளர் மீது எதிர்க்கட்சிகளுக்கு ஏன் திடீரென அனுதாபம் வரவேண்டும். தென்னிந்தியர்கள் மகாராஷ்டிராவை நாசமாக்கவில்லையா?

மகாராஷ்டிராவில் டான்ஸ் பார்கள், லேபீஸ் பார்கள் அதிகரிக்க தென்னிந்தியர்கள் காரணமாகும். அவர்கள் இளைஞர்களைக் கறைபடியச் செய்துவிட்டனர். மகாராஷ்டிரா கலாசாரத்தைக் கெடுத்துவிட்டனர்.

எம்.எல்.ஏ.விடுதி கேண்டீனுக்கு எதிராக இதற்கு முன்பு 5 ஆண்டில் 400 முறை புகார் செய்யப்பட்டுள்ளது. அப்படி இருந்து நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

கேண்டீன் உரிமையாளர் தாக்கப்பட்டது சிறிய சம்பவம். எனக்கும் சட்டம் தெரியும். சபாநாயகரைச் சந்தித்து எனது விளக்கத்தைத் தெரிவித்துவிட்டேன். முதல்வர் மற்றும் துணை முதல்வரையும் சந்தித்து விளக்கம் அளிப்பேன். நான் செய்தது தவறு என்று அவர்கள் நினைத்தால் எந்தத் தண்டனை கொடுத்தாலும் ஏற்றுக்கொள்ளத் தயாராக இருக்கிறேன்'' என்று தெரிவித்தார்.

எம்.எல்.ஏ. சஞ்சய் கெய்க்வாட் சர்ச்சைகள்

எம்.எல்.ஏ. சஞ்சய் கெய்க்வாட் இதற்கு முன்பு பல முறை சர்ச்சைக்குரிய வகையில் பேசி இருக்கிறார். காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் நாக்கை அறுப்பவர்களுக்கு ரூ.11 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என்று அறிவித்தார்.

சஞ்சய் கெய்க்வாட்
சஞ்சய் கெய்க்வாட்

இதே போன்று ஒரு முறை புலியை வேட்டையாடி அதன் பல்லை மாலையாக்கி எனது கழுத்தில் அணிந்து கொண்டேன் என்று குறிப்பிட்டு இருந்தார்.

அதோடு கடந்த ஜனவரி மாதம், வாக்காளர்களைக் கொச்சைப்படுத்திப் பேசியிருந்தார். ஆனால் ஆளும் கட்சி எம்.எல்.ஏ. என்பதால் அவர் மீது இது வரை அவரது கருத்துக்களுக்காக எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY

ஒலிபெருக்கி இல்லாத மும்பை: மசூதி, வழிபாட்டுத்தலங்களில் இருந்த 1,600 ஒலிபெருக்கிகள் அகற்றம்!

மும்பை உட்பட மகாராஷ்டிரா முழுவதும் உள்ள வழிபாட்டுத்தலங்களில் இருக்கும் ஒலிபெருக்கிகளுக்கு எதிராக மாநில அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதுவும் சட்டவிரோத ஒலிபெருக்கிகள் கண்டறியப்பட்டு அகற்றப்பட்டு வரு... மேலும் பார்க்க

Skincase: மனித தோல் வடிவில் போன் கவர் உருவாக்கிய விஞ்ஞானிகள் - என்ன காரணம் தெரியுமா?

பிரெஞ்சு ஆராய்ச்சியாளர் மார்க் டெய்சியர், விர்ஜின் மீடியா O2 உடன் இணைந்து, ஸ்கின்கேஸ் என்ற தொலைபேசி உறையை உருவாக்கியுள்ளார்.இந்த போன் கவர் சூரிய ஒளியில், அதிக யூவி கதிர்கள் வெளிப்படும் போது நிறம் மாற்... மேலும் பார்க்க

Jaipur: 'தினமும் 12 மணி நேரம் படிப்பு; பேத்தியின் உத்வேகம்' - CA தேர்வில் வென்ற 71 வயது முதியவர்!

பேத்தியின் உத்வேகத்தால் ஜெய்ப்பூரைச் சேர்ந்த முதியவர் ஒருவர் தனது 71 வயதில் சார்ட்டட் அக்கவுண்ட் படிப்பைப் படித்த சாதித்துள்ளார்.லிங்க்ட் இன் பதிவின்படி, ஓய்வு பெற்ற வங்கி நிபுணரான தாராசாந்த் அகர்வால்... மேலும் பார்க்க

சென்னை: "என்னாச்சு? நீங்க ஓகேதான?" - டிராஃபிக் போலீசாரின் வார்த்தையால் நெகிழ்ந்த பெண்; என்ன நடந்தது?

சென்னை போக்குவரத்து காவலருடனான ஒரு சிறிய உரையாடல், பெண் ஒருவரை எப்படி நெகிழ வைத்தது என்பது குறித்து அவர் லிங்க்ட்-இன் தளத்தில் பகிர்ந்து கொண்டுள்ளார். அந்தப் பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.சென்னையை... மேலும் பார்க்க

Gingee Fort: செஞ்சி கோட்டையை உலகப் பாரம்பர்ய சின்னமாக அறிவித்த யுனெஸ்கோ; சுவாரஸ்ய பின்னணி என்ன?

சத்ரபதி சிவாஜி மகாராஜா மகாராஷ்டிரா முழுவதும் கோட்டைகளைக் கட்டினார். இக்கோட்டைகள் இன்றைக்கும் சுற்றுலா மையங்களாகவும், சத்ரபதி சிவாஜியின் பெயர் சொல்லும் நினைவுச் சின்னங்களாக இருக்கின்றன.இந்நிலையில் மகார... மேலும் பார்க்க

ஏமாற்றிய காதலன்; பிரிந்த இளம்பெண்ணுக்கு அடுத்தநாளே கிடைத்த 11 லட்சம் ரூபாய் - எப்படி தெரியுமா?

அமெரிக்காவில் தன்னை ஏமாற்றிய காதலனை பிரிந்த பெண்ணிற்கு அடுத்த நாளே, அவருடைய காதலன் கொடுத்த பரிசு மூலம் 14,000 டாலர்கள் (இந்திய மதிப்பில் சுமார் 11.62 லட்சம் ரூபாய்) கிடைத்துள்ள சம்பவம், ஆச்சர்யத்தை ஏற... மேலும் பார்க்க