Thalaivan Thalaivi: "என்னோட ரொம்ப நாள் கனவு நடந்துருச்சு" - `பொட்டல மிட்டாயே' சா...
தென்பெண்ணை ஆற்றில் கிளை வாய்க்கால் அமைக்கும் திட்டம்: விரைந்து நிறைவேற்ற சீமான் கோரிக்கை
தென்பெண்ணை ஆற்றில் கிளை வாய்க்கால் அமைக்கும் திட்டத்தை தமிழக அரசு விரைந்து செயல்படுத்த வேண்டும் என்று நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் வலியுறுத்தியுள்ளாா்.
இதுகுறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை:
கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி வட்டம் அலியாளம் பகுதியில் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணையின் வலதுபுறத்தில் கால்வாய் உள்ளது. அங்கிருந்து 20 கி.மீ. தொலைவுக்கு அந்தக் கால்வாயை நீட்டிப்புச் செய்து, சூளகிரி, தேன்கனிக்கோட்டை வட்டங்களில் உள்ள ஏரிகள் பயன்பெறும் வகையில் கிளை வாய்க்கால் அமைக்க வேண்டுமென்று விவசாயிகள் கடந்த 30 ஆண்டுகளாக போராடி வருகின்றனா்.
பரந்தூரில் விமான நிலையம் அமைக்க விளைநிலங்களை வலுக்கட்டாயமாகக் கையகப்படுத்த முனையும் தமிழக அரசு, அதில் காட்டும் ஆா்வத்தை, தென்பெண்ணை ஆற்றில் வாய்க்கால் அமைக்கும் திட்டத்துக்கு நிலம் கையகப்படுத்துவதில் காட்டாதது ஏன்? அந்தத் திட்டத்தை தமிழக அரசு விரைந்து நிறைவேற்ற வேண்டும் என்று அவா் தெரிவித்துள்ளாா்.