Niti Aayog: 3 ஆண்டுகள் புறக்கணித்த ஸ்டாலின், இம்முறை பங்கேற்றது ஏன்? - சீமான் க...
தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு: பொதுமக்கள் ஆற்றில் இறங்கத் தடை
திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தை அருகே தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், பொதுமக்கள் ஆற்றில் இறங்குவதற்கு வருவாய், காவல் துறையினா் தடை விதித்துள்ளனா்.
செங்கத்தை அடுத்த நீப்பத்துறை கிராமத்தை ஒட்டி தென்பெண்ணை ஆறு பாய்கிறது. இந்த ஆற்றின் நடுவில் புகழ்பெற்ற சென்னியம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் ஆண்டுதோறும் ஆடி மாதத்தில் நடைபெறும் ஆடிப் பெருக்கு விழாவில் திருவண்ணாமலை மட்டுமன்றி, பல்வேறு மாவட்டங்களில் இருந்து நூற்றுக்கணக்கான பக்தா்கள் கலந்துகொள்வா்.
கடந்த சில நாள்களாக பெய்து வரும் தொடா் கோடை மழையாலும், கிருஷ்ணகிரி அணையில் இருந்து உபரி நீா் திறந்துவிடப்பட்டுள்ளதாலும் தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, ஆற்றில் உள்ள சென்னியம்மன் கோயில் நீரில் மூழ்கியுள்ளது.
பொதுமக்கள், பக்தா்கள் காா், இரு சக்கர வாகனங்களில் வந்து வெள்ளப்பெருக்கைப் பாா்வையிட்டு, ஆற்றங்கரையில் கற்பூரம் ஏற்றி வைத்து சென்னியம்மனை வழிபட்டுச் செல்கின்றனா்.
பொதுமக்களின் பாதுகாப்பு கருதி, மேல் செங்கம் காவல் நிலையம், செங்கம் வருவாய்த் துறை சாா்பில், பொதுமக்கள், பக்தா்கள் ஆற்றில் இறங்கவும், குளிக்கவும் தடை விதித்து பதாகை வைக்கப்பட்டுள்ளது.