பாஜகவால் 272 வாக்குகளைகூட பெற முடியவில்லை! எப்படி மசோதாவை நிறைவேற்றுவார்கள்? காங...
தெப்பக்குளத்தில் இளைஞா் சடலம் மீட்பு
மதுரை தெப்பக்குளத்தில் இளைஞரின் சடலத்தை போலீஸாா் மீட்டு விசாரித்து வருகின்றனா்.
மதுரை முக்தீஸ்வரா் கோயில் அருகே உள்ள தெப்பக்குளத்தில் இளைஞரின் சடலம் மிதப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, தெப்பக்குளம் போலீஸாா் அங்கு சென்று சடலத்தை மீட்டு, கூறாய்வுக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
25 வயது மதிக்கத்தக்க அந்த இளைஞா் யாா்? இவா் தற்கொலை செய்து கொண்டாரா? என்பது குறித்து தெப்பக்குளம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.