செய்திகள் :

தெருநாய்க்கடி: "போன உயிரை விலங்குகள் நல ஆர்வலர்களால தர முடியுமா?"- அதிரடி உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம்

post image

தெருநாய்க்கடி மற்றும் அதனால் ஏற்படும் ரேபிஸ் நோய் உயிரிழப்புகள் தொடர்பாக பிரபல நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டிருந்தது.

அந்தச் செய்தியின் அடிப்படையில் உச்ச நீதிமன்றம் கடந்த மாத இறுதியில் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்திருந்தது.

இந்த வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜே.பி. பர்திவாலா, ஆர். மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.

உச்ச நீதிமன்றம்
உச்ச நீதிமன்றம்

அப்போது, முக்கிய உத்தரவுகளை பிறப்பித்த நீதிபதிகள், "டெல்லி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் சம்பந்தப்பட்ட மாநகராட்சிகள் உடனடியாக ஒரு தெருநாய் விடாமல் அனைத்தையும் பிடிக்க வேண்டும்.

இதற்காக அவர்கள் சிறப்பு படை வேண்டுமானாலும் உருவாக்கிக் கொள்ளலாம். ஆனால், எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவாக இந்த தெருநாய்கள் பிடிக்கப்பட வேண்டும்.

இந்த நடவடிக்கைகளில் எந்த சமரசமும் செய்யப்படக்கூடாது. `தெருநாய்கள் இல்லாத சுற்றுப்புறம்' என்பதை அடிப்படையாக வைத்து அதிக முக்கியத்துவம் வழங்கி இந்த விவகாரத்தை அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும்" என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மேலும், "யாரேனும் தனி நபர்களோ அல்லது விலங்குகள் நல அமைப்புகளோ இந்த நடவடிக்கைக்கு தடை செய்யும் வகையில் முயற்சிகள் மேற்கொண்டார்கள் என்றால் அவர்களுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு உள்ளிட்ட கடுமையான நடவடிக்கைகளில் இந்த நீதிமன்றம் இறங்கும்" என எச்சரிக்கை விடுத்த நீதிபதிகள், "நாங்கள் இதை எங்களுக்காக செய்யவில்லை. இது பொதுமக்களின் நலன் சார்ந்த விஷயம்.

இதில் எந்த விதமான சென்டிமென்ட்டுக்கும் இடம் கிடையாது. விலங்குகள் நல ஆர்வலர்கள் என்ற பெயரில் சிலர் செய்யும் செயல்பாடுகள் எங்களுக்கு கோபத்தை கொடுக்கிறது.

ரேபிஸ் நோயினால் உயிரிழந்தவர்களை இந்த விலங்குகள் நல ஆர்வலர்களால் திருப்பிக் கொண்டு வர முடியுமா?" என்று கட்டமாக கேள்வியெழுப்பினர்.

தெருநாய்
தெருநாய்

அதுமட்டுமல்லாமல் நீதிபதிகள், "பிடிக்கப்படும் தெருநாய்கள் முடிந்த வரை பொதுமக்கள் அதிகம் இல்லாத இடங்களுக்கு கொண்டு செல்லப்பட வேண்டும்.

இவற்றில் ஒரு நாய்கூட எக்காரணத்தைக் கொண்டும் விடுவிக்கப்படக் கூடாது. பிடிக்கப்படும் நாய்களுக்கு முறையான தடுப்பூசி செலுத்துவது கருத்தடை செய்வது போன்றவற்றை மேற்கொண்டு பராமரிக்க வேண்டும்.

இதற்கான தேவையான கட்டமைப்புகளை எட்டு வார காலத்திற்குள் டெல்லி அரசு மற்றும் டெல்லி மாநகராட்சி மேற்கொள்ள வேண்டும்.

உத்தரவு

இந்த அனைத்து நாய்களும், பாதுகாப்பான இடங்களில் முழுமையான சிசிடிவி காட்சிகளால் கண்காணிக்கப்பட வேண்டும்.

எத்தனை நாய்கள் ஒரு நாளைக்கு பிடிக்கப்படுகிறது உள்ளிட்ட அனைத்து தகவல்களும் முறையாக பராமரிக்கப்பட வேண்டும்.

ஒரு வார காலத்திற்குள் நாய்க்கடி சம்பவங்கள் தொடர்பான புகார்களை தெரிவிக்க உதவி எண்கள் உருவாக்கப்பட்டு, எங்கெல்லாம் ரேபிஸ் நோய்க்கான தடுப்பூசி இருக்கிறது என்பதை பொதுமக்களுக்கு விளம்பரப்படுத்த வேண்டும்" என்று உத்தரவிட்டு விசாரணையை ஆறு வாரங்களுக்கு ஒத்தி வைத்தனர்.

"அதிமுக ஆட்சிக்கு வந்தால் தூய்மைப்பணியாளர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவர்"-எஸ்.பி.வேலுமணி வாக்குறுதி

பணி நிரந்தரம் செய்ய வேண்டியும், மாநகராட்சி சுகாதாரப் பணிகளை தனியாரிடம் ஒப்படைக்கும் நடவடிக்கையை எதிர்த்தும் சென்னை ரிப்பன் மாளிகைக்கு வெளியே போராடி வரும் தூய்மைப் பணியாளர்களின் போராட்டம் 11-வது நாளாகத... மேலும் பார்க்க

பெங்களூரு: முடிவுக்கு வந்த நீண்டநாள் காத்திருப்பு; மெட்ரோ மஞ்சள் பாதையைத் திறந்து வைத்தார் பிரதமர்!

பெங்களூருவின் போக்குவரத்து வரலாற்றில் நேற்றைய தினம் ஒரு முக்கிய நாள். நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட ‘மஞ்சள் மெட்ரோ லைன்’ நேற்று (ஆகஸ்ட் 10, 2025) பிரதமர் நரேந்திர மோடியால் திறந்து வைக்கப்பட்டது. இந்த... மேலும் பார்க்க

`2026 தேர்தல்... மேற்கு மண்டலத்தில்தான் திமுக-வின் அத்தியாயம் தொடங்கும்' - முதல்வர் ஸ்டாலின்

திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டையில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில், முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டு முடிவுற்ற பணிகள் மற்றும் புதிய திட்டப் பணிகளைத் திறந்து வைத்து பேசுகையில... மேலும் பார்க்க

Today Roundup: தூய்மை பணியாளர்களின் தொடர் போராட்டம் டு மோடியின் தொழில்நுட்ப புரட்சி வரை| 10.8.2025

இன்றைய நாளின் (ஆகஸ்ட் 10) முக்கியச் செய்திகள்!*பணி நிரந்தரம் செய்ய வேண்டியும், மாநகராட்சி சுகாதாரப் பணிகளை தனியாரிடம் ஒப்படைக்கும் நடவடிக்கையை எதிர்த்தும் போராடி வரும் தூய்மை பணியாளர்களின் போராட்டம் ப... மேலும் பார்க்க

``Zero Defect, Zero Effect; தொழில்நுட்பத்தில் புரட்சி செய்ய இதுவே சரியான நேரம்'' - பிரதமர் மோடி

பெங்களூரு மக்களின் நீண்ட நாள் எதிர்பார்ப்பாக இருந்த எலக்ட்ரானிக் சிட்டி வரையிலான மெட்ரோ ரயில் இணைப்பான மஞ்சள் வழித்தட சேவையை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார். புதிய மெட்ரோ ரயிலைக் கொடி அசை... மேலும் பார்க்க

PMK: ``தந்தையை மிஞ்சிய தனயன் இருக்கக் கூடாது; போராட்டம் நடத்தினால் தமிழ்நாடு தாங்காது'' - ராமதாஸ்

பாமக நிறுவனர் ராமதாஸ் இல்லாமலேயே அன்புமணி தலைமையில் முதல் முறையாக அக்கட்சியின் பொதுக்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. இதையடுத்து இன்று இரவுபாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தலைமையில... மேலும் பார்க்க