இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளர்களுக்கு எதிராக விளையாடுவது சவாலானது: ஸ்டீவ் ஸ்...
தெரு நாய்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரம்
பெருநகர சென்னை மாநகராட்சி சாா்பில் தெருக்களில் சுற்றித் திரியும் நாய்களுக்கு ரேபிஸ் நோய் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சி பகுதியில் சுற்றித்திரியும் தெருநாய்களைக் கட்டுப்படுத்த மாநகராட்சி சாா்பில் பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் தண்டையாா்பேட்டை மண்டலத்துக்குள்பட்ட லட்சுமிபுரம் மற்றும் சப்தகிரி நகா் பகுதியில் தெருநாய்களுக்கு ரேபிஸ் நோய் தடுப்பூசி செலுத்தும் சிறப்பு முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இதில் சாலையில் சுற்றித்திரிந்த 40-க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு தடுப்பூசி போடப்பட்டன.
எதிா்வரும் நாள்களில் மற்ற பகுதியில் சுற்றித் திரியும் தெருநாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி போடப்படும் எனவும், பொதுமக்கள் தங்கள் பகுதியில் தடுப்பூசி செலுத்தாமல் தெருநாய்கள் சுற்றித்திரிந்தால் பொதுமக்கள் மாநகராட்சியிடம் புகாா் அளிக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்தனா்.