கன்னித்தன்மை பரிசோதனைக்கு கட்டாயப்படுத்துவது சட்டவிரோதம்: சத்தீஸ்கா் உயா்நீதிமன்...
தெலங்கானாவில் 6 மாடிக் கட்டடம் இடிந்து விபத்து: 6 பேர் பலி!
தெலங்கானாவில் 6 மாடிக் கட்டடத்தின் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வந்த நிலையில், திடீரென கட்டடம் இடிந்து விழுந்ததில் 6 பேர் பலியானதாக முதல்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் பலர் காயமடைந்துள்ளனர்.
பத்ராத்ரி கொத்தகுடம் மாவட்டத்தில் உள்ள பத்ராசலம் நகரில் ஆறு மாடிக் கட்டடம் கட்டப்பட்டு வருகின்றது. இந்தக் கட்டடத்தின் கட்டுமானப் பணிகளில் தொழிலாளர்கள் ஈடுபட்டு வந்த நிலையில், இன்று பிற்பகலில் திடீரென இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது.
முதல்கட்டமாக 6 தொழிலாளர்கள் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சிலர் படுகாயங்களுடன் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
இதையும் படிக்க : 15 வயது சிறுவனைக் கொன்ற நண்பர்கள்! ரூ. 10 லட்சம் கேட்டு மிரட்டல்!
மேலும், இடிபாடிகளை அகற்ற புல்டோசர்கள் மற்றும் கனரக இயந்திரங்களைப் பயன்படுத்தி, உள்ளே சிக்கியுள்ள தொழிலாளர்களை மீட்கும் பணியில் மீட்புக் குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.
விபத்து தொடர்பாக வழக்குப் பதிவு செய்து காவல் துறையினர் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.