தேசிய சுகாதார இயக்கம் மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு: மத்திய அமைச்சரவை ஒப்புதல...
தெலுங்கில் வெளியாகும் மதகஜராஜா..!
விஷாலின் மதகஜராஜா தெலுங்கில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இயக்குநர் சுந்தர். சி இயக்கத்தில் நடிகர்கள் விஷால், சந்தானம், வரலட்சுமி, அஞ்சலி உள்ளிட்டோர் நடித்த ’மதகஜராஜா’ திரைப்படம் கடந்த 2013 ஆம் ஆண்டு உருவாகி வெளியீட்டிற்குத் தயாரானது. அப்படத்தைத் தயாரித்த ஜெமினி பிலிம் சர்கியூட் நிறுவனம் பொருளாதர பிரச்னைகளால் அப்படத்தின் வெளியீட்டை ஒத்திவைத்தனர்.
பின்னர், பொங்கல் வெளியீடாக 12 ஆண்டுகள் கழித்து கடந்த ஜன.12-ல் வெளியானது.
இந்தத் திரைப்படம் வெளியான 9 நாள்களில் உலகளவில் ரூ. 44 கோடி வரை வசூலித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
விஷாலுக்கு இந்த வெற்றி மிகவும் நெகிழ்ச்சியைக் கொடுத்தது. சுந்தர் சி பிறந்தநாளுக்கு தனது எக்ஸ் பக்கத்தில் “எனது மருந்து” எனக் கூறியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.
தமிழில் இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, தெலுங்கிலும் டப்பிங் செய்து வெளியாகவிருக்கிறது.
தெலுங்கில் வரும் ஜன.31ஆம் தேதி வெளியாகுமென படக்குழு அறிவிக்கப்பட்டுள்ளது.
சத்ய கிருஷ்ணன் புரடக்ஷன்ஸ் இந்தப் படத்தை தெலுங்கில் வெளியிடுகிறது.