ஆம் ஆத்மி கட்சி மத்திய அரசுடன் சண்டையிட்டதால் தில்லி பின்தங்கியது: அமித் ஷா கடும...
தெலுங்கு கபாலி படத் தயாரிப்பாளர் கே.பி. செளத்ரி தற்கொலை?
தெலுங்கு திரைப்படத் தயாரிப்பாளர் கே.பி. செளத்ரி தனது இல்லத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளார். அவருக்கு வயது 44.
கோவாவில் உள்ள தனது வாடகை வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் அவரின் உடலைக் காவல் துறையினர் மீட்டுள்ளனர்.
தெலுங்கு திரைப்படத் தயாரிப்பாளரான கே.பி. செளத்ரி, ரஜினிகாந்த் நடித்த கபாலி படத்தின் (தெலுங்கு) தயாரிப்பாளராவார். இவர் கோவாவின் சியோலிம் பகுதியில் வாடகை வீட்டில் தங்கிவந்துள்ளார்.
இந்நிலையில் இன்று தனது வீட்டில் தூக்கில் தொங்கியபடி அவரின் உடலை மீட்டதாக காவல் துறை கண்காணிப்பாளர் அக்ஷத் கெளஷல் தெரிவித்துள்ளார்.
காவல் துறைக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் செளத்ரி வீட்டிற்கு விரைந்ததாகவும், இது குறித்து விரிவான விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 2023ஆம் ஆண்டில் போதைப்பொருள் வழக்கில் தொடர்புடையதாக கே.பி. செளத்ரியை சைத்ராபாத் சிறப்பு விசாரணைக் குழு கைது செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].
இதையும் படிக்க | 2024-இல் உள்நாட்டு விமான நிறுவனங்களுக்கு விடுக்கப்பட்ட வெடிகுண்டு மிரட்டல்கள்: மத்திய அரசு வெளியிட்டுள்ள தகவல்