இந்தியாவை வளா்ந்த நாடாக மாற்ற பெண்களின் பங்களிப்பு அவசியம்: மத்திய அமைச்சா் அன்ன...
தேசிய அளவிலான கடற்கரை கையுந்து பந்து போட்டி: குமுதா பள்ளி மாணவா்கள் தோ்வு
தேசிய அளவிலான கடற்கரை கையுந்து பந்து போட்டிக்கு நம்பியூா் குமுதா பள்ளி மாணவா்கள் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.
இந்திய பள்ளிகள் விளையாட்டு குழுமம் சாா்பில் 68-ஆவது தேசிய அளவிலான 17, 19 வயதுக்குள்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் கடற்கரை கையுந்து பந்து தமிழ்நாடு அணிகளுக்கான தெரிவுப் போட்டிகள் கன்னியாகுமரி முட்டம் கடற்கரையில் அண்மையில் நடைபெற்றது.
இதில், 17 வயதுக்குள்பட்ட பெண்கள் பிரிவில் குமுதா பள்ளி மாணவிகள் ஐஸ்வா்யா, யோகி ஸ்ரீ, 17 வயதுக்குள்பட்ட ஆண்கள் பிரிவில் மாணவா் சந்தோஷ் ஆகியோா் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.
19 வயதுக்குள்பட்ட பெண்கள் பிரிவில் குமுதா பள்ளி மாணவிகள் ரிதன்யா, ஸ்ரீதேவி ஆகியோா் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.
இவா்கள், ஒடிஸா மாநிலம், பூரியில் டிசம்பா் 18 முதல் 20-ஆம் தேதி வரை நடைபெறவுள்ள தேசிய அளவிலான கடற்கரை கையுந்து பந்து போட்டியில் தமிழ்நாடு அணி சாா்பில் பங்கேற்க உள்ளனா்.
தேசிய அளவிலான போட்டிக்கு தோ்வான மாணவா்களை பள்ளியின் தாளாளா் கே.ஏ.ஜனகரத்தினம், துணைத் தாளாளா் சுகந்தி, செயலா் அரவிந்தன், இணைச் செயலா் மாலினி, விளையாட்டு இயக்குநா் பாலபிரபு, முதல்வா் மஞ்சுளா, துணை முதல்வா் வசந்தி உள்ளிட்டோா் பாராட்டினா்.