செய்திகள் :

தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்திலிருந்து 1.55 கோடி பேர் நீக்கம்!

post image

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தில் இருந்து 1.55 கோடி பேர் நீக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு மக்களவையில் தெரிவித்துள்ளது.

தகுதி அற்றவர்களாக கருதப்பட்டவர்கள் மட்டுமே நீக்கப்பட்டுள்ளதாகவும், தகுதியுடையவர்கள் பணியில் இருப்பதை அரசு உறுதி செய்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளது.

மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்த தேசிய ஊரக வளர்ச்சித் துறை இணை அமைச்சர் கமலேஷ் பாஸ்வான் தெரிவித்ததாவது,

''2022 - 23 நிதியாண்டில் 86,17,887 பேரும், 2023 - 24 நிதியாண்டில் 68,86,532 பேரும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். இந்த இரு நிதியாண்டுகளிலும் சேர்த்து 1,55,04,419 பேர் நீக்கப்பட்டுள்ளனர்.

போலி அட்டை அல்லது நகல், தவறான வேலை அட்டை, கிராம பஞ்சாயத்திலிருந்து நிரந்தரமாக வீடு மாறியது மற்றும் நகர்ப்புற எல்லைக்குட்பட்ட குடியிருப்பில் இருப்பது போன்ற காரணங்களால் தகுதியற்றவர்கள் அடையாளம் காணப்பட்டு நீக்கப்பட்டுள்ளனர்.

இத்திட்டத்தை செயல்படுத்துவது மாநில அல்லது யூனியன் பிரதேச அரசின் பொறுப்பாக உள்ளது. வேலை அட்டைகளை நீக்குவது அல்லது புதுப்பிப்பது மாநில அரசின் வழக்கமான பொறுப்பாகும்.

இதேவேளையில் தகுதியான வேலை அட்டைகள் நீக்கப்படவில்லை என்பதை மாநில அரசு உறுதிப்படுத்த வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.

மற்றொரு கேள்விக்கு பதிலளித்த பாஸ்வான், மொத்தமுள்ள 13.41 கோடி வேலையாள்களில் 13.34 கோடி பேரின் ஆதார் எண்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தில் இருந்து வேலை செய்துவருபவர்களை நீக்குவது அல்லது மீண்டும் சேர்த்துக்கொள்வது குறித்து மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு வழிகாட்டுதல் நெறிமுறைகள் கொடுக்கப்படுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

இதையும் படிக்க | தூய்மை இந்தியா திட்டத்தில் ரூ. 2,300 கோடி வருவாய்: மோடி பதிலுரை

நகா்ப்புற நக்ஸல்களின் குரல்- ராகுல் மீது பிரதமா் மோடி மறைமுக விமா்சனம்

‘நாட்டில் நகா்ப்புற நக்ஸல்களின் குரலாக சிலா் பகிரங்கமாகப் பேசுகின்றனா்; இந்திய அரசுக்கு எதிராக ‘போா்ப் பிரகடனம்’ செய்யும் அவா்களால் அரசமைப்புச் சட்டத்தையோ, நாட்டின் ஒற்றுமையையோ புரிந்து கொள்ள முடியாது... மேலும் பார்க்க

நடப்பு நிதியாண்டில் 1.38 லட்சம் புதிய நிறுவனங்கள் பதிவு: அரசு புள்ளி விவரம்

நிகழ் நிதியாண்டில் ஜனவரி 26-ஆம் தேதி வரையிலான நிலவரப்படி நாடு முழுவதும் 17,654 நிறுவனங்கள் மூடப்பட்டிருப்பதும், புதிதாக 1,38,027 நிறுவனங்கள் பதிவு செய்யப்பட்டிருப்பதும் அரசு புள்ளிவிவரம் மூலம் தெரியவந... மேலும் பார்க்க

செல்போன் உற்பத்தியில் இந்தியாவுக்கு 2வது இடம்!

உலக அளவிலான செல்போன் உற்பத்தியில் இந்தியா 2வது இடத்தில் இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. 2014ஆம் ஆண்டு நாட்டில் 2 மையங்கள் மட்டுமே இருந்ததாகவும், ஆனால் தற்போது 300 உற்பத்தி மையங்கள் இருப்பதாகவும... மேலும் பார்க்க

வாக்குச்சாவடி முறைகேடுகளை கண்டறிய ஆம் ஆத்மியின் தன்னார்வலர் குழு!

தில்லி பேரவைத் தேர்தலில் வாக்குச்சாவடி முறைகேடுகள் நடைபெறுவதைக் கண்டறிய ஆம் ஆத்மி கட்சி தன்னார்வலர் குழுக்களை அமைத்துள்ளது.தில்லி பேரவைத் தோ்தலுக்கான அரசியல் கட்சிகளின் தோ்தல் பிரசாரம் திங்கள்கிழமை ... மேலும் பார்க்க

மகா கும்பமேளா கூட்ட நெரிசல் மிகைப்படுத்தப்பட்ட விபத்து: ஹேம மாலினி

உத்தரப் பிரதேசத்தில் நடைபெற்றுவரும் மகா கும்பமேளாவில் நேரிட்ட கூட்ட நெரிசல் மிகப்பெரிய நிகழ்வு அல்ல என்றும், மிகைப்படுத்தப்பட்டது எனவும் பாஜக எம்.பி., ஹேம மாலினி தெரிவித்துள்ளார். கும்பமேளா கூட்ட நெரி... மேலும் பார்க்க

தூய்மை இந்தியா திட்டத்தில் ரூ.2300 கோடி வருவாய்: மோடி பதிலுரை

மக்கள் பிரச்னைகள் சிலருக்குப் புரியவில்லை என பிரதமர் நரேந்திர மோடி எதிர்க்கட்சியினரை மறைமுகமாக சாடியுள்ளார். குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பிரதமர் நரேந்திர மோடி நன்றி... மேலும் பார்க்க