செய்திகள் :

தேசிய தொழில்நுட்ப ஆசிரியர் பயிற்சி மையத்தில் வேலை வேண்டுமா?

post image

சென்னையில் உள்ள தேசிய தொழில்நுட்ப ஆசிரியர் பயிற்சி மையத்தில் ஆசிரியரல்லாத குரூப் 'ஏ', 'பி' மற்றும் 'சி' பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் 24 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

அறிவிப்பு எண். 03/2025-26

குரூப் 'ஏ' பணியிடங்கள் விவரம்:

பணி: Sr. Librarian

காலியிடம்: 1

சம்பளம்: மாதம் ரூ.57,700 - 98,200

தகுதி: நூலக அறிவியல், தகவல் அறிவியலில் குறைந்தபட்சம் 55 சதவிகித மதிப்பெண்களுடன் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். குறைந்தபட்சம் 13 ஆண்டுகள் பல்கலைக்கழகத்தில் துணை நூலகராக அல்லது கல்லூரி நூலகராக 18 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 25 - 35-க்குள் இருக்க வேண்டும்.

பணி: Senior Technical Officer (Production Executive)

காலியிடம்: 1

சம்பளம்: மாதம் ரூ. 67,700 - 2,08,700

தகுதி: பொறியியல் துறையில் எம்.இ, எம்.டெக் முடித்திருப்பதுடன் சம்மந்தப்பட்ட துறையில் குறைந்தது 15 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 45-க்குள் இருக்க வேண்டும்.

பணி: Technical Officer (Editor)

காலியிடம்: 1

சம்பளம்: மாதம் ரூ. 6,100 - 1,77,500

தகுதி: பொறியியல் துறையில் பி.இ, பி.டெக் முடித்து சம்மந்தப்பட்ட துறையில் குறைந்தது 10 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 45-க்குள் இருக்க வேண்டும்.

பணி: Technical Officer (Production Assistant)

காலியிடம்: 2

சம்பளம்: மாதம் ரூ.56,100 - 1,77,500

தகுதி: பொறியியல் துறையில் பி.இ, பி.டெக் முடித்து சம்மந்தப்பட்ட துறையில் குறைந்தது 10 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 45-க்குள் இருக்க வேண்டும்.

குரூப் 'பி' பணியிடங்கள் விவரம்:

பணி: Technical Assistant Gr. I (Cameraman)

காலியிடம்: 1

சம்பளம்: மாதம் ரூ.35,400 – 1,12,400

தகுதி: அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் இருந்து ஒளிப்பதிவில் பட்டம் அல்லது அதற்கு இணையான படிப்பில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். இதில் ஸ்டில் புகைப்படம் எடுத்தல், ஒளிப்பதிவு மற்றும் திரைப்படத் தயாரிப்பு போன்ற தொடர்புடைய துறையில் 3 ஆண்டு அனுபவமும் பெற்றிருக்க வேண்டும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் இருந்து ஒளிப்பதிவு , திரைப்படத் தயாரிப்பு பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். திரைப்படத் தயாரிப்பு நிறுவனம் ஒன்றில், கல்வி தொலைக்காட்சி தயாரிப்பு, ஊடக நிறுவனங்கள், தயாரிப்பு பிரிவு போன்றவற்றில் திரைப்படத் தயாரிப்பில் குறைந்தது 3 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். ஸ்டில்,திரைப்பட கேமராக்களைக் கையாளும் திறன்கள் பெற்றிருப்பது விரும்பத்தக்கது.

வயது வரம்பு: 35-க்குள் இருக்க வேண்டும்.

குரூப் 'சி' பணியிடங்கள் விவரம்:

பணி: Assistant Section Officer (Hindi Translator)

காலியிடம்: 1

சம்பளம்: மாதம் ரூ.29,200 – 92,300

தகுதி: ஆங்கில பாடத்துடன் கூடிய ஹிந்தி பாடப்பிரிவில் இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 35-க்குள் இருக்க வேண்டும்.

பணி: Technical Assistant Gr. II (Console Operator)

காலியிடம்: 1

சம்பளம்: மாதம் ரூ.29,200 – 92,300

தகுதி: அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் கணினி அறிவியல் மற்றும் பொறியியல், தகவல் தொழில்நுட்ப பிரிவில் 3 ஆண்டு டிப்ளமோ முடித்திருப்பதுடன் தொடர்புடைய துறையில் 10 ஆண்டுகள் பணி அனுபவம் அல்லது கணினி அறிவியல் மற்றும் பொறியியல், தகவல் தொழில்நுட்பம் பிரிவில் பி.இ., பி.டெக். முடித்து சம்மந்தப்பட்ட துறையில் 5 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 35-க்குள் இருக்க வேண்டும்.

பணி: Senior Secretariat Assistant (Stenographer)

காலியிடம்:2

சம்பளம்: மாதம் ரூ.25,500 – 81,100

தகுதி: ஏதேனும் ஒரு துறையில் இளங்கலைப் பட்டம் பெற்றிருப்பதுடன் ஆங்கில சுருக்கெழுத்தில் நிமிடத்திற்கு 100 வார்த்தைகள் மற்றும் ஆங்கில தட்டச்சில் நிமிடத்திற்கு 40 வார்த்தைகள் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும். மேலும் பல்கலைக்கழகம், ஆராய்ச்சி நிறுவனம் ,மத்திய, மாநில அரசு, பொதுத்துறை நிறுவனம், தன்னாட்சி அமைப்புகள், தனியார் நிறுவனம் ஆகிய ஏதாவதொன்றில் சுருக்கெழுத்தாளராக மூன்று ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 35-க்குள் இருக்க வேண்டும்.

பணி: Junior Secretariat Assistant

காலியிடம்: 2

சம்பளம்: மாதம் ரூ.19,900 – 63,200

தகுதி: பத்தாம் வகுப்பு, +2 அல்லது அதற்கு இணையான தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் ஆங்கிலத்தில் நிமிடத்திற்கு குறைந்தபட்சம் 30 வார்த்தைகள் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும். ஒரு ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 35-க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: தகுதியானவர்கள் எழுத்துத் தேர்வு, திறன் தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: https://www.nittrc.ac.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பித்தவுடன் அதனை பிரிண்ட் அவுட் எடுத்து அதனுடன் தேவையான அனைத்துச் சான்றிதழ்களின் நகல்களையும் சுய சான்றொப்பம் செய்து ஜூலை 9 ஆம் தேதிக்குள் கீழ்வரும் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

The Director, National Institute of Technical Teachers Training and Research, Tharamani, Chennai - 600 113, TamilNadu, India.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 24.6.2025

மேலும் கூடுதல் விபரங்கள் அறிய இங்கே கிளிக்செய்து தெரிந்துகொள்ளவும்.

டைடல் பார்க்கில் பொறியாளர் வேலை வேண்டுமா?: உடனே விண்ணப்பிக்கவும்!

திருவாரூர் மத்திய பல்கலைக் கழகத்தில் வேலை: விண்ணப்பங்கள் வரவேற்பு!

திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள ஆசிரியரல்லாத பணிகளுக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி: Faculty Resource Personகாலியிடங்கள்: 3சம்பளம்: மாதம் ரூ.80,000... மேலும் பார்க்க

சென்னை துறைமுக ஆணையத்தில் பைலட் வேலை வேண்டுமா?

சென்னையில் உள்ள சென்னை துறைமுக ஆணையத்தில் நிரப்பப்பட உள்ள பைலட் பணிக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி: Pilot(Contract basis)காலியிடங்கள்: 2சம்பளம்: பயிற்சி விமானி (பய... மேலும் பார்க்க

டைடல் பார்க்கில் பொறியாளர் வேலை வேண்டுமா?: உடனே விண்ணப்பிக்கவும்!

திருச்சி, மதுரை டைடல் பார்க்கில் ஒப்பந்தகால அடிப்படையில் நிரப்பப்பட உள்ள உதவி பொறியாளர்(எலக்ட்ரிக்கல்) பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை சென்னை டைடல் பார்க் நிறுவனம் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு... மேலும் பார்க்க

வேலை... வேலை... வேலை... தேசிய தொழில்நுட்ப ஆசிரியர் பயிற்சி மையத்தில் உதவியாளர் வேலை!

சென்னையில் உள்ள தேசிய தொழில்நுட்ப ஆசிரியர் பயிற்சி மையத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியான மாற்றுத்திறனாளிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்பட... மேலும் பார்க்க

6,734 தொழில்நுட்பப் பணியிடங்களை நிரப்ப ரயில்வே முடிவு

புது தில்லி: தொழில்நுட்பப் பிரிவில் காலியாக உள்ள 6,734 பணியிடங்களை நிரப்ப ரயில்வே அமைச்சகம் முடிவு செய்துள்ளது. முன்னதாக, அனைத்து ரயில்வே கோட்டங்களில் காலியாக உள்ள தொழில்நுட்பப் பிரிவு பணியிடங்கள் குற... மேலும் பார்க்க

திருச்சி என்ஐடி-இல் வேலை: விண்ணப்பிக்க நாளை கடைசி

திருச்சி தேசிய தொழில்நுட்பக் கல்லூரியின் உலோகவியல் மற்றும் பொருட்கள் பொறியியல் துறையில் காலியாக புராஜெக்ட் அசோஸியேட் - II பணிக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி: Proje... மேலும் பார்க்க