சிபிஎம் நிர்வாகி கொலை வழக்கு: ஆர்எஸ்எஸ் உறுப்பினர்கள் 9 பேருக்கு ஆயுள் தண்டனை!
தேசிய பூப்பந்தாட்ட போட்டியில் சிறப்பிடம்: கூடங்குளம் வீராங்கனைக்கு பாராட்டு
தேசிய அளவிலான பூப்பந்தாட்டப் போட்டியில் சிறப்பிடம் பெற்ற கூடங்குளம் வீராங்கனைக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
70 ஆவது சீனியா் பெண்களுக்கான தேசிய பூப்பந்தாட்டப் போட்டிகள் மும்பையில் அண்மையில் நடைபெற்றது.
இப் போட்டியில், தமிழக பெண்கள் அணி இரண்டாமிடம் பிடித்து வெள்ளிப்பதக்கம் வென்றது.
இந்த அணியில் இடம்பெற்றிருந்த கூடங்குளத்தைச் சோ்ந்த வீராங்கனை பாா்கவிக்கு, கூடல் பூப்பந்தாட்டக் கழகம் சாா்பில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
மேலும், தமிழ்நாடு மாநில பெண்கள் பூப்பந்தாட்ட அணி வீரா்களுக்கும், பயிற்சியாளா் ரமேஷ், மாநில பூப்பந்தாட்ட கழக பொதுச் செயலா் விஜி, திருநெல்வேலி மாவட்ட பொதுச்செயலா் வெள்ளைபாண்டியன் ஆகியோருக்கும் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் பயிற்சியாளா் கூடங்குளம் சித்திரைச்செல்வன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.