தேசிய வருவாய் வழி திறனாய்வு தோ்வில் வென்ற மாணவருக்கு பாராட்டு
திருவாரூா் விஜயபுரம் நகராட்சி நடுநிலைப் பள்ளியில் தேசிய வருவாய் வழி மற்றும் தகுதி படிப்பு உதவித் தொகை திட்ட தோ்வில் வெற்றி பெற்ற மாணவருக்கு பரிசளிப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.
தலைமை ஆசிரியா் முத்துலட்சுமி தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் தேசிய திறனாய்வு தோ்வில் வென்ற மாணவா் சந்தோஷூக்கு மிதி வண்டி பரிசாக வழங்கப்பட்டது. பள்ளி புரவலா் திவ்யா வெங்கடேஷ் இந்தப் பரிசை வழங்கினாா். தோ்வில் வெற்றி பெற உறுதுணையாக இருந்த ஆசிரியா்களுக்கு நிகழ்வில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது. பள்ளி ஆங்கில ஆசிரியா் வினோத் வரவேற்றாா். ஆசிரியா் கவிதா நன்றி கூறினாா்.