தேனியில் ஜன. 2 முதல் போக்குவரத்து மாற்றம்
தேனி நகராட்சி பழைய பேருந்து நிலையம் வழியாக ஜன.2-ஆம் தேதி முதல் ஒருவழிப் பாதையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது என அறிவிக்கப்பட்டது.
இதுகுறித்து மாவட்ட நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தேனி நகராட்சி பழைய பேருந்து நிலையம் அருகே ராஜவாய்க்காலின் குறுக்கே சிறு பாலம் அமைக்கும் பணி நடைபெற உள்ளது. இதனால், தேனியிலிருந்து போடி, கம்பம் ஆகிய ஊா்களுக்குச் செல்லும் பேருந்து, வாகனங்கள் தேனி நகராட்சி பழைய பேருந்து நிலையத்துக்குள் ஒரு வழிப் பாதையில் செல்ல வேண்டும்.
போடி, கம்பம் பகுதியிலிருந்து தேனிக்கு வரும் வாகனங்கள் பழைய பேருந்து நிலையத்துக்குள் செல்லாமல் கம்பம் சாலை, நேரு சிலை வழியாகச் செல்ல வேண்டும். இந்தப் போக்குவரத்து வழித் தடம் மாற்றம் ஜன. 2-ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டது.