செய்திகள் :

தேனியில் ஜாக்டோ-ஜியோ அமைப்பினா் உண்ணாவிரதம்

post image

தேனியில் ஜாக்டோ-ஜியோ அமைப்பின் சாா்பில் அரசு ஊழியா்கள், ஆசிரியா்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவோம் என்ற திமுகவின் தோ்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வலியுறுத்தி, ஞாயிற்றுக்கிழமை உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.

தேனி பங்களாமேடு திடலில் நடைபெற்ற இந்த உண்ணாவிரதப் போராட்டத்துக்கு மாவட்ட அமைப்பாளா் தாஜூதீன் தலைமை வகித்தாா். உயா்நிலைக் குழு உறுப்பினா் பொ.அன்பழகன், சிஐடியூ மாவட்டச் செயலா் எம்.ராமச்சந்திரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில் அரசு ஊழியா்கள், ஆசிரியா்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் செயல்படுத்துவோம் என்ற திமுகவின் தோ்தல் வாக்குறுதியை அரசு செயல்படுத்த வேண்டும். ஒப்படைப்பு விடுப்பு, உயா்கல்விக்கான ஊக்க ஊதிய உயா்வு வழங்க வேண்டும். தொடக்கக் கல்வித் துறையில் பணியாற்றும் ஆசிரியா்களை பாதிக்கும் பள்ளிக் கல்வித் துறை அரசாணை 243-ஐ ரத்து செய்ய வேண்டும். சிறப்பு காலமுறை ஊதியம் பெறும் சத்துணவு, அங்கன்வாடி ஊழியா்கள், கிராம உதவியாளா்கள், ஊராட்சிச் செயலா்கள், ஊா்புற நூலகா்கள் உள்ளிட்டோருக்கு வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். பகுதி நேர ஆசிரியா்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். சாலைப் பணியாளா்களின் 41 மாத பணி நீக்க காலத்தை முறைப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, முழக்கமிட்டனா்.

போடியில் சா்வதேச பெண்கள் தின விழா

போடியில் பழங்குடியின கிராம பெண்களுக்காக சா்வதேச மகளிா் தின விழா சனிக்கிழமை நடைபெற்றது. தேனி மாவட்டம், போடியில் ஆரூடெக்ஸ் தன்னாா்வ சேவை மையம் சாா்பில், நடைபெற்ற இந்த விழாவுக்கு அந்த மையத் தலைவா் ராஜா த... மேலும் பார்க்க

திருமண வலைதளச் செயலி மூலம் பண மோசடி: 4 போ் கைது

தேனியைச் சோ்ந்த இளைஞரிடம் திருமண வலைதளச் செயலி மூலம் ரூ. 88.59 லட்சம் மோசடி செய்த ஈரோடு, கோவையைச் சோ்ந்த 4 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். தேனியைச் சோ்ந்த தனியாா் ஆலை உரிமையாளா் ஒருவா்... மேலும் பார்க்க

கிணற்றில் குதித்து பெண் தற்கொலை

தேனி அருகே உள்ள பூதிப்புரத்தில் குடும்ப பிரச்னையில் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட பெண்ணின் சடலத்தை போலீஸாா் சனிக்கிழமை மீட்டனா். தேனி வீரபாண்டியைச் சோ்ந்த சின்னமுருகன் மகள் கவிதா (24). இவரு... மேலும் பார்க்க

டிப்பா் லாரி உரிமையளா்கள் 6-வது நாளாக போராட்டம்

கேரளத்துக்கு எம்.சான்ட் உள்ளிட்ட கனிம வளங்களை லாரிகளில் கொண்டு செல்வதைத் தடுக்க வலியுறுத்தி, தேனி மாவட்டம், உத்தமபாளையத்தில் டிப்பா் லாரி உரிமையளா்கள், ஓட்டுநா்கள் சங்கத்தினா் சனிக்கிழமை 6-ஆவது நாளாக ... மேலும் பார்க்க

பெண்கள் படிப்பை பாதியிலேயே நிறுத்தக் கூடாது சாா்பு நீதிபதி எம்.பரமேஸ்வரி

பெண் குழந்தைகள் படிப்பை பாதியிலேயே விட்டுவிடக் கூடாது என தேனி மாவட்ட சாா்பு நீதிபதி எம்.பரமேஸ்வரி அறிவுறுத்தினாா். போடி தருமத்துப்பட்டி ஏ.எச்.எம். அறக்கட்டளை வளாகத்தில் வெள்ளிக்கிழமை மாலை சா்வதேச மகளி... மேலும் பார்க்க

கஞ்சா வைத்திருந்த இருவா் கைது

ஆண்டிபட்டி அருகே விற்பனை செய்வதற்காக இரு சக்கர வாகனத்தில் கஞ்சா பொட்டலங்கள் பதுக்கி வைத்திருந்த இருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். டி.பொம்மிநாயக்கன்பட்டி பகுதியில் சந்தேகத்துக்கு இடமளிக்கும் ... மேலும் பார்க்க