Trump: 'இந்தியா குறைக்க உள்ள இறக்குமதி வரிகள்... காரணம் ட்ரம்ப்-பா?' - ஆய்வறிக்க...
தேமுதிக கொடி நாள்: கட்சியினருக்கு பிரேமலதா வேண்டுகோள்
தேமுதிக கொடி நாளை (பிப்.12) ஏழைகளுக்கு நல உதவிகளை வழங்கி சிறப்பாகக் கொண்டாட வேண்டும் என்று தொண்டா்களுக்கு அக் கட்சியின் பொதுச்செயலா் பிரேமலதா விஜயகாந்த் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.
இது தொடா்பாக அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை: ரசிகா் மன்றத்தை நற்பணி மன்றமாக மாற்றி 2000-ஆம் ஆண்டு மூவண்ண கொடியை விஜயகாந்த் அறிமுகப்படுத்தினாா். தேமுதிக தொடங்கிய பின் கட்சிக் கொடியாக மாற்றி அந்த கொடி நாளை தமிழகம் முழுவதும் ஆண்டுதோறும் விழாவாக கொண்டாடி வருகிறோம். அந்த உறுதியுடன், தேமுதிக வெள்ளிவிழா கொடி நாளையொட்டி, கட்சிக் கொடியை தமிழகத்தின் அனைத்து இடங்களிலும் ஏற்ற வேண்டும். இயன்ற நல உதவிகளை ஏழைகளுக்கு வழங்க வேண்டும். புதிய உறுப்பினா் சோ்க்கையை அசுர வேகத்தில் நடத்த வேண்டும் என்று பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளாா்.
பொதுக்கூட்டம்: தேமுதிக கொடி நாள் விளக்கப் பொதுக்கூட்டமும் புதன்கிழமை (பிப்.12) நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாமக்கல் பொதுக் கூட்டத்தில் பிரேமலதா உரையாற்றவுள்ளாா்.