செய்திகள் :

தேமுதிக தனித்துப் போட்டியா? பிரேமலதா பதில்!

post image

எதிர்வரும் 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் தேமுதிக தனித்துப் போட்டியிட தயங்காது என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக கட்சித் தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் மாவட்ட செயலாளர்கள், மண்டல பொறுப்பாளர்கள் மற்றும் பூத் கமிட்டி உறுப்பினர்களிடையே ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்திற்குப் பிறகு பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:

தமிழகம் முழுவதும் நானும், விஜய பிரபாகரனும் சுற்றுப் பயணம் மேற்கொள்ள இருக்கிறோம். வரும் ஜனவரி 9 ஆம் தேதி கடலூரில் தேமுதிக மாநாடு நடைபெறவுள்ளது. அதன்பிறகு, தேர்தல் பணிகள் முழுவீச்சில் தொடங்கப்படும்.

தேமுதிகவுக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவி அளிப்பதாக எடப்பாடி பழனிசாமிதான் எழுதி கையெப்பம் இட்டு கொடுத்தார்கள். அந்த ஒப்பந்தத்தை அரசியல் நாகரீகம் கருதி பொதுவெளியில் காண்பிக்கவில்லை.

எதிர்வரும் 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் தேமுதிக தனித்துப் போட்டியிட தயங்காது. தேமுதிக தனித்துப் போட்டியிடுவது குறித்து தற்போது கூற இயலாது. அதிமுகவுடனான சுமூக உறவு குறித்து இப்போது எங்களால் சொல்ல சொல்ல முடியாது. எங்கள் கட்சியை வலுப்படுத்தில் முழு முனைப்போடு செயல்பட்டு கொண்டு இருக்கிறோம்.

கூட்டணி ஆட்சி அமைந்தால் அதை தேமுதிக வரவேற்கும். திமுக கூட்டணிக்கு வர வேண்டும் என்று அழைப்பு விடுத்த செல்வப்பெருந்தகை, தொல். திருமாவளவனுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஆனால், தேமுதிக - திமுக கூட்டணி தொடர்பாக ஸ்டாலினிடம் இந்தக் கேள்வியை நீங்கள் கேட்க வேண்டும் என்றார்.

தவெகவுடன் கூட்டணி அமையுமா என்ற கேள்விக்கு, ”விஜய் எங்கள் வீட்டுப் பையன். ”அரசியல் நிலைப்பாடு குறித்து தற்போது கூற முடியாது. விஜய்யிடம்தான் நீங்கள் கேட்க வேண்டும்” என்று பதில் அளித்தார்.

இதையும் படிக்க: 2299 கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அரசாணை வெளியீடு!

டிஎன்பிஎஸ்சி தேர்வு எதிரொலி: சென்னைப் பல்கலை. தேர்வு ஒத்திவைப்பு

டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு காரணமாக ஜூன் 15ஆம் தேதி நடைபெறவிருந்த சென்னைப் பல்கலைக்கழகத்தின் தொலைதூரக் கல்வி செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. மாற்றுத் தேதிகள் www.ideunom.ac.in இணையதளத்தில் ... மேலும் பார்க்க

பழங்குடியின மாணவிக்கு வீடு, மடிக்கணினி வழங்கிய முதல்வர் ஸ்டாலின்

சென்னை ஐஐடியில் உயர்கல்வி பயில தேர்ச்சி பெற்ற பழங்குடியின மாணவிக்கு வீடு மற்றும் மடிக்கணினியை முதல்வர் ஸ்டாலின் வழங்கி வாழ்த்தினார்.இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், முதல்வர... மேலும் பார்க்க

நீலகிரி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் நாளை(ஜூன் 14) விடுமுறை அறிவிப்பு

அதி கனமழை எச்சரிக்கையை அடுத்து நீலகிரி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் நாளை(ஜூன் 14) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அறிவிப்பை மீறி செயல்படும் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட மு... மேலும் பார்க்க

எனக்கு சான்றிதழ் அளிக்கும் தகுதி முதல்வர் ஸ்டாலினுக்கு இல்லை- இபிஎஸ்

எனக்கு சான்றிதழ் அளிக்கும் தகுதி முதல்வர் ஸ்டாலினுக்கு இல்லை என்று அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், பிறந்தது முதல் இன்றுவரை எனது குடும்ப... மேலும் பார்க்க

ஜூன் 18-ல் திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம் அறிவிப்பு

கீழடி அகழாய்வுகளை வெளியிட மறுக்கும் பா.ஜ.க அரசைக் கண்டித்து வரும் 18ஆம் தேதி திமுக மாணவர் அணி சார்பில் ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து திமுக மாணவர் அணி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்ந... மேலும் பார்க்க

கடன் வசூலில் இம்சை செய்தால் 5 ஆண்டு சிறை, ரூ. 5 லட்சம் அபராதம்! ஆளுநர் ஒப்புதல்!

கடனை வசூலிப்பதில் கடுமை காட்டினால், 5 ஆண்டு சிறைத் தண்டனை வழங்கப்படும் என்ற மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்தார்.பணக்கடன் வழங்கும் நிறுவனங்கள், ஏற்கெனவே நிதிச்சுமையில் இருக்கும் கடனாளிகளிடம் இருந்து ... மேலும் பார்க்க