காஸாவில் மக்கள் தஞ்சமடைந்த முகாம்களின் மீது இஸ்ரேல் தாக்குதல்! 16 பேர் பலி!
தேரே இஷ்க் மெய்ன் டீசர்!
நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகும் பாலிவுட் படமான தேரே இஷ்க் மெய்ன் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.
நடிகர் தனுஷ் இயக்குநர் ஆனந்த் எல். ராய் கூட்டணியில் உருவாகும் தேரே இஷ்க் மெய்ன் படத்தின் படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன் தில்லியில் துவங்கியது.
இப்படம் ராஞ்சனா கதையுடன் தொடர்புடைய படமாக உருவாகலாம் எனக் கூறப்பட்டு வந்த நிலையில், படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாகத் தனுஷ் தெரிவித்திருந்தார். இப்படத்தில் நாயகியாக க்ருத்தி சனோன் நடிக்கிறார்.
இந்த நிலையில், இட்லி கடை வெளியீட்டை முன்னிட்டு தேரே இஷ்க் மெய்ன் டீசரை இன்று வெளியிட்டுள்ளனர்.
காதல், ஆக்சன் காட்சிகளுடன் கூடிய ஏ. ஆர். ரஹ்மானின் பின்னணி இசை ரசிகர்களைக் கவர்ந்து வருகிறது. இப்படம் நவ. 28 ஆம் தேதி வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.