செய்திகள் :

தேர்தல் ஆணையத்திற்கு எதிரான மனு ரூ.1 லட்சம் அபராதத்துடன் தள்ளுபடி!

post image

வாக்காளர் பட்டியல் மோசடி தொடர்பான தேர்தல் ஆணையத்திற்கு எதிரான மனுவை ரூ.1 லட்சம் அபராதத்துடன் சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

கோடம்பாக்கத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் வெங்கட சிவக்குமார் என்பவர், வாக்காளர் பட்டியலில் முறைகேடு நடப்பதாகக் கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.

மனுவில், "கடந்த 2024 ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் வாக்காளர் பட்டியலில் முறைகேடு நடந்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.

வாக்காளர் பட்டியலில் போலியான வாக்காளர்கள், ஒரே முகவரியில் அதிகமான வாக்காளர்கள் என பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதாக அவரது குற்றச்சாட்டுகளுக்கு தேர்தல் ஆணையம் உரிய விளக்கம் அளிக்கவில்லை. ஆனால், ராகுல் காந்தியை மிரட்டும் வகையில் அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

நீதிமன்றம் இதில் தலையிட்டு வாக்காளர் பட்டியல் மோசடி தொடர்பான குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும்" எனக் கூறியிருந்தார்.

இந்த மனு தலைமை நீதிபதி எம்.எம். ஸ்ரீவாஸ்தவா, ஜி. அருள்முருகன் அமர்வில் இன்று(செப். 9) விசாரணைக்கு வந்தது.

அப்போது விளம்பர நோக்கில் இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளதாகக் கூறி மனுதாரர் ரூ. 1 லட்சம் அபராதம் செலுத்த உத்தரவிட்டு நீதிபதிகள் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளனர்.

Petition against Election Commission dismissed with fine of Rs. 1 lakh by Madras HC

இதையும் படிக்க | குடியரசு துணைத் தலைவர் தேர்தல்: சோனியா, கார்கே, பிரியங்கா வாக்களித்தனர்

ஒகேனக்கல் அருவிகளில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதி!

காவிரி ஆற்றல் நீர்வரத்து விநாடிக்கு 12,000 கன அடியாகச் சரிந்துள்ளதால் ஒகேனக்கல் அருவிகளில் சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு புதன்கிழமை முதல் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.கர்நாடக அணைகளிலிருந்து காவிரி ஆற்ற... மேலும் பார்க்க

உலகத் தலைவர்களில் முதன்மையானவர் மோடி; இரும்பு மனிதர் அமித் ஷா: செங்கோட்டையன்

உலகத் தலைவர்களில் முதன்மையானவர் மோடி, இந்தியாவின் இரும்பு மனிதர் அமித் ஷா என்று முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.குடியரசு துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சி.பி. ராதாகிருஷ்ணனுக்க... மேலும் பார்க்க

பாமக பெயர், சின்னம் விவகாரம்: நீதிமன்றத்தில் ராமதாஸ் கேவியட் மனுக்கள் தாக்கல்!

பாட்டாளி மக்கள் கட்சியின் பெயர் மற்றும் சின்னத்தின் உரிமை தொடர்பாக கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தரப்பில் கேவியட் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.இதுதொடர்பான கேவியட் மனுக்கள், சென்னை உயர்நீதிமன்றம் மற... மேலும் பார்க்க

தனியார் மருத்துவமனைகளில் கூட்டு மருத்துவ சிகிச்சை! தொடக்கி வைத்தார் மா. சுப்பிரமணியன்

தமிழகத்தில் பல்வேறு இடங்களில் செயல்படும் நான்கு தனியார் மருத்துவமனைகளில் கூட்டு மருத்துவ சிகிச்சை முறையை தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தொடக்கி வைத்துள்ளார். மேலும் பார்க்க

அரசுப் பேருந்து - பைக் மோதல்! பெண் உள்பட இருவர் பலி!

திண்டுக்கல் மாவட்டத்தில் இருசக்கர வாகனம் மீது அரசு பேருந்து மோதிய விபத்தில் நூற்பாலை தொழிலாளிகள் இருவர் பலியான சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்... மேலும் பார்க்க

திருட்டு வழக்கில் கைது: ஊராட்சி மன்றத் தலைவி திமுகவில் இருந்து நீக்கம்

திருட்டு வழக்கில் கைதான ஊராட்சி மன்றத் தலைவி பாரதி, திமுகவில் இருந்து நீக்கப்பட்டாா். இதற்கான அறிவிப்பை திமுக பொதுச் செயலா் துரைமுருகன் செவ்வாய்க்கிழமை வெளியிட்டாா். அவரது அறிவிப்பு விவரம்: வேலூா் மாவ... மேலும் பார்க்க