செய்திகள் :

தேர்தல் பத்திரம் மூலம் மிரட்டி நன்கொடை பெற்றாரா..? நிர்மலா சீதாராமன் வழக்கில் விசாரணை..!

post image

கடந்த ஏப்ரல் மாதம், ஆதர்ஷ் ஐயர் என்பவர் பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தொடர்ந்தார். அதில்,

``ரெய்டு என்று மிரட்டி தொழிலதிபர்களிடம் இருந்து நிர்மலா சீதாராமன், ஜெ.பி.நட்டா, கர்நாடகா முன்னாள் பாஜக தலைவர் கட்டீல், பாஜக தலைவர்கள், அமலாக்கத்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் தேர்தல் பத்திரம் மூலம் சுமார் ரூ.8,000 கோடிக்கு மேல் பணம் பெற்றுள்ளனர்" என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்த வழக்கு விசாரணைக்கு வந்தப்போது, நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட புகார் கொடுக்கப்பட்டவர்கள் மீது வழக்குப்பதிய சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையொட்டி, கடந்த செப்டம்பர் மாதம் பெங்களூரு திலகர் நகர் போலீஸ் நிலையத்தில் இவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அந்த வழக்கில் நிர்மலா சீதாராமன் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருந்தார்.

நிர்மலா சீதாராமன்

இந்த நிலையில், இந்த வழக்கு மீண்டும் நேற்று கர்நாடகா உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கு குறித்து கட்டீல் தரப்பில், "இது அரசியல் நோக்கத்திற்காக பொய்யாக புனையப்பட்ட வழக்கு" என்று கூறப்பட்டது.

ஆதர்ஷ் ஐயர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் பிரசாந்த் பூசண், "ஆளும் கட்சியால் மிரட்டி தேர்தல் பத்திரம் மூலம் இவ்வளவு பெரிய தொகையை பெற முடியும் என்றால், அது தேர்தல் அரசியலை குழைக்கிறது. அமலாக்கத்துறை முற்றிலும் மத்திய அரசின் கீழ் உள்ளது" என்று வாதாடினார்.

இவரை எதிர்த்து வாதாடிய சீனியர் வழக்கறிஞர் கே.ஜி. ராகவன், "மிரட்டலால் பாதிக்கப்பட்டவர்கள் என்று கூறப்படுகிற யாரும் நீதிமன்றத்திற்கு வரவில்லை. மேலும், மனுதாரர் பாதிக்கப்பட்டவர் அல்ல" என்று வாதாடினார்.

இரண்டு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி நாகபிரசன்னா, "தீர்ப்பு ஒத்திவைக்கப்படுகிறது. இறுதி தீர்ப்பு வரும் வரை குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது எந்த நடவடிக்கையும் இல்லை" என்று கூறியுள்ளார்.

முல்லைப் பெரியாறு அணையைக் கட்டினது பென்னி குயிக்னு நம்ம எல்லாருக்கும் தெரியும். ஆனா அதுக்குப் பின்னாடி இருக்க காரணங்கள் உங்களுக்கு தெரியுமா? பிரிட்டிஷார் ஏன் அந்த அணையைக் கட்டுனாங்க... எப்படி அந்த இடத்தைத் தேர்ந்தெடுத்தாங்க... ஏன் 999 வருஷத்துக்கு நிலத்தைக் குத்தகைக்கு எடுத்தாங்க... இப்படிப்பட்ட பல்வேறு கேள்விகளுக்கான பதில்களையும் வரலாற்றையும் சுவாரஸ்யமாக சொல்லும் நாவல்தான் ஆனந்த விகடனில் வெளியான நீரதிகாரம்.

இப்போது அது விகடன் Play-ல் ஆடியோ புத்தகமாக!

இப்பவே விகடன் App-ஐ இன்ஸ்டால் பண்ணுங்க. நீரதிகாரம் உள்பட நூற்றுக்கும் மேற்பட்ட ஆடியோ புத்தகங்களை இலவசமா கேட்டு என்ஜாய் பண்ணுங்க!

Doctor Vikatan: ஸ்டீம்பாத் (Steam bath) எடுத்தால் ஹார்ட் அட்டாக் வருமா?

Doctor Vikatan: உடற்பயிற்சி செய்துவிட்டு, ஸ்டீம்பாத் (Steam bath) எனப்படும் நீராவிக்குளியல் எடுத்த நபர், மாரடைப்பில் உயிரிழந்த செய்தியைப் பார்த்தேன். ஸ்டீம்பாத் எடுப்பது என்பது உயிரைப் பறிக்கும் அளவுக... மேலும் பார்க்க

Gym: ஜிம் மரணங்கள் தொடர்வது ஏன்? - ``நிச்சயம் தவிர்க்க முடியும்" மருத்துவர்கள் விளக்கம்!

'ஜிம்'முக்குப் போகிறவர்கள் ஆரோக்கியமானவர்கள்‌ என்று எல்லோருமே நம்பிக்கொண்டிருக்கிறோம். ஆனால், ஜிம் மரணங்கள் தொடர்ந்து நடந்துகொண்டே இருக்கின்றன. நேற்றைய தினம்கூட, சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த ஜிம் உரிமைய... மேலும் பார்க்க

மகாராஷ்டிரா: `இப்பவே ஆரம்பிச்சுட்டாங்க..' - தேர்தல் தொடங்கிய நிலையில் பா.ஜ.கவில் சேர்ந்த வேட்பாளர்!

மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தல் இன்று காலை தொடங்கி வாக்குபதிவு நடந்து வருகிறது. இத்தேர்தலுக்காக வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததாக பா.ஜ.க தேசிய செயலாளர் வினோத் தாவ்டே மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்... மேலும் பார்க்க

Amit Shah: ``குற்றம் நிரூபிக்காமல் சிறையில் இருப்பவர்களுக்கு நீதி கிடைக்கும்'' - அமித்ஷா சொல்வதென்ன?

'குற்றம் நிரூபிக்கப்படாமல் ஜெயிலில் இருப்பவர்களுக்கு வரும் நவம்பர் 26-ம் தேதிக்குள் நீதி கிடைக்கும்' என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார். குற்றம் சாட்டப்பட்டு, ஆனால் குற்றம் நிரூபிக்கப்... மேலும் பார்க்க

மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட்: விறுவிறுப்பு... ஆர்வத்துடன் வாக்களித்த பாலிவுட், அரசியல் பிரபலங்கள்..!

மகாராஷ்டிரா சட்டமன்றத்திற்கு இன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இதே போன்று ஜார்க்கண்ட் மாநில சட்டமன்றத்திற்கு இன்று இரண்டாம் கட்டமாக 38 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது. மகாராஷ்டிரா சட்டமன்றத் ... மேலும் பார்க்க

U.P: ``கும்பகர்ணன் ஆறு மாதங்கள் தூங்கவில்லை; அவர் ரகசியமாக..'' - என்ன சொல்கிறார் உ.பி ஆளுநர்?!

'உலகின் முதல் விமானத்தை உருவாக்கியது ரைட் சகோதரர்கள் அல்ல... பரத்வாஜ முனிவர் தான்' என்று உத்தரப்பிரதேச கவர்னர் ஆனந்திபென் பட்டேல் பேசியுள்ளது சர்ச்சையை கிளப்பி உள்ளது. லக்நௌவில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்... மேலும் பார்க்க